கடைசி டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்த ஆயத்தம்.. இதை செய்தால் போதும்.. ஆப்கான் பயிற்சியாளர் டிராட்
மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி நாளை பெங்களூரை எதிர்கொள்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் அணி போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இதுவரை இந்திய அணியை எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை.

இதனால் முதல் வெற்றியை பெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கும். இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய ஆப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜனார்த்தன் டிராட், மூன்றாவது t20 போட்டியில் 40 ஓவர் வரை போட்டி நடக்கும் என நினைக்கிறேன். எங்களுடைய அணி வீரர்கள் இந்திய அணியின் பேட்டிங்கை நடு வரிசையில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து விளையாட வைக்க வேண்டும்.
அப்படி நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் நன்றாக இருக்கும். ரஷித் கான் எப்போது அணிக்கு திரும்புவார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் மீது எந்த நெருக்கடியும் இல்லை. அவர் விரைவில் விளையாட வேண்டும் என்று நாங்களும் கடந்த இரண்டு டி20 போட்டியில் நாங்கள் செய்ய தவறி விஷயத்தை மூன்றாவது போட்டியில் செய்வோம் என்று நம்புகிறேன்.
எங்களிடம் கடைசி பத்து ஓவரில் நன்றாக அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியா பேட்டிங் செய்யும்போது கடைசி ஐந்து ஓவரில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது எவ்வாறு கடினமாக இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். பெங்களூர் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும். எனவே செய்த தவறில் இருந்து பாடம் கற்று இந்தியாவுக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்படுத்தினால் வெற்றி கிட்டும் என்று ஜனார்த்தன் டிராட் கூறியுள்ளார்.
Story first published: Tuesday, January 16, 2024, 20:24 [IST]
Other articles published on Jan 16, 2024


Click it and Unblock the Notifications