Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா ரெக்கார்டை வைச்சு என்னமா பில்டப் பண்ணீங்க.. இப்ப அழுவுறதா.. சிரிக்குறதான்னு தெரியலையே!

Recommended Video

WORLD CUP 2019: IND VS AFG | ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்த ரோஹித்- வீடியோ

சவுதாம்ப்டன் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா படு சொதப்பலாக ஆடியது.

இந்தப் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா இவ்வளவு ரன்கள் அடித்து இந்த சாதனையை செய்வார் என அவரது குறிப்பிட்ட சாதனையை பற்றி அதிக பில்டப் கொடுக்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மா அடிப்பார் என கூறிய ரன்களை இந்திய அணியால் கூட தாண்ட முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணி இந்திய பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டது.

பில்டப்

பில்டப்

ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் ரோஹித் சர்மாவின் இரட்டை சதம் குறித்த சாதனை பற்றி பில்டப் கொடுக்கப்பட்டது. இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 264 ரன்கள் அடித்து இருந்தார். இது தான் அவரது அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்கள்.

ரோஹித் முறியடிப்பார்

ரோஹித் முறியடிப்பார்

மேலும், உலக அளவில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான். ஆப்கானிஸ்தான் அணி சிறிய அணி என்பதால், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தன் சாதனையை, தானே முறியடிக்கப் போகிறார் என பில்டப் கொடுத்தனர் ரசிகர்கள்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆனால், ரோஹித் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டியின் துவக்கத்தில் 264 ரன்கள் எங்கே, 1 ரன் எங்கே என ரோஹித்துக்கு பில்டப் கொடுத்தவர்களை பார்த்து கை கொட்டி சிரித்தனர் பொதுவான ரசிகர்கள். ஆனால், எல்லா ரசிகர்களுக்கும் சேர்த்து இந்தியா பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

படுமோசம்

படுமோசம்

விராட் கோலி, ஜாதவ் தவிர்த்து எந்த பேட்ஸ்மேனும் நீடித்து ஆடவில்லை. சொற்ப ரன்களே எடுத்தனர். மேலும், சுழற் பந்துவீச்சில் ரன் குவிக்க தடுமாறினர். கோலி 67, ஜாதவ் 52 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முடியவில்லை

முடியவில்லை

ரோஹித் சர்மா எடுப்பார் என கூறப்பட்ட 264 ரன்களை இந்திய அணியால் கூட கடக்க முடியவில்லை. வெறும் 224 ரன்கள் மட்டும் தான் எடுத்தது இந்திய அணி. இதைக் கண்டு ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கலக்கல்

கலக்கல்

ஆப்கானிஸ்தான் கலக்கலாக பந்து வீசி ரோஹித் சர்மா மட்டுமின்றி, இந்திய அணியையும் மிரட்டியது. ரெக்கார்டு பண்றது எல்லாம் இருக்கட்டும்.. முதல்ல ரன் எடுங்க என இந்திய அணிக்கு பெப்பே காட்டியது.

அழுவதா? சிரிப்பதா?

அழுவதா? சிரிப்பதா?

ரோஹித் சர்மாவிற்கு பில்டப் கொடுத்த ரோஹித்தின் தீவிர ரசிகர்கள் இப்போது அழுவதா.. சிரிப்பதா என விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 20:03 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+