Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்.. சாதனை படைத்த ரோகித் சர்மா.. சோகத்தில் ஹிட்மேன் ஃபேன்ஸ்!

மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறியதன் மூலமாக ரோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

14 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பினார் ரோகித் சர்மா. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டதால், ரோகித் சர்மா தனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளதாக அவரது ரசிகர்கள் உற்சாக கொண்டாடினர். இதனால் ஆஃப்கானுக்கு எதிரான முதல் டி20 போட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

IND vs AFG : Indian Captain Rohit Sharma have the Most ducks for the Team India in the T20 Cricket History

இதன்பின் 159 ரன்கள் என்ற சாதாரண இலக்கை விரட்ட ரோகித் சர்மா களமிறங்கிய போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை நோக்கி நடந்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் எப்போது அவுட்டானாலும் கோபமடையாத ரோகித் சர்மா, இந்த போட்டியில் சுப்மன் கில்லை திட்டிக் கொண்டே நடந்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் மூலமாகவே இந்த டி20 போட்டி ரோகித் சர்மாவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ரசிகர்களும் உணர்ந்தனர். இருப்பினும் இந்திய அணி மிகச்சிறந்த வெற்றியை பெற்றது.

இதன் மூலம் 100வதுடி20 போட்டியில் வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அதேபோல் டக் அவுட்டானதன் மூலமாக சில மோசமான சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்திய டி20 வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை ரோகித் சர்மா 11 முறையும், அதன்பின் கேஎல் ராகுல் 5 முறையும் டக் அவுட்டகியுள்ளனர். அதேபோல் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ரோகித் சர்மா 32வது முறையாக டக் அவுட்டாகியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்துஇல் ஜாகீர் கான் முதலிடத்தில் உள்ள நிலையில், 7வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 12, 2024, 19:20 [IST]
Other articles published on Jan 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+