Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: ஆப்கானிஸ்தானை கதறவிட்ட கே.எல். ராகுல்.. ஆனால் செஞ்சுரி அடித்த அடுத்த பந்தில் சோகம்

சண்டிகர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல் அபார சதம் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி துவக்கம் அளித்தது. அதிரடியாக விளையாட முயன்ற ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் அவுட்டான பிறகு களம் இறங்கிய சாய் சுதர்சன், கே.எல். ராகுலுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டது. தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சாய் சுதர்சன், பொறுப்புடன் விளையாடி 104 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IND vs AFG KL Rahul hit 12th Century in Mullanpur Test against Afghanistan

கே.எல். ராகுல் சாதனைகள்

சாய் சுதர்சன் அவுட்டான பிறகு, கேப்டன் சுப்மன் கில்லுடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். ஏற்கனவே அரைசதம் அடித்திருந்த ராகுல், தொடர்ந்து சிறப்பாக விளையாடி 164 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 12-வது சதமாகும். மேலும், ஒரு துவக்க வீரராக அவர் அடிக்கும் 11-வது சதம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் அணியையும் சேர்த்து மொத்தம் 6 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக கே.எல். ராகுல் டெஸ்டில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.

சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி.. ஆரம்பமே ரெக்கார்டு

சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி.. ஆரம்பமே ரெக்கார்டு

சதம் அடித்த மகிழ்ச்சி நீடிக்கும் முன்பே, அதற்கு அடுத்த பந்திலேயே ராகுல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஆப்கானிஸ்தான் அணியின் ஜியாவுர் ரஹ்மான் ஷரிஃபி வீசிய பந்தில், ரஹ்மானுல்லா குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானார். ராகுல் வெளியேறிய பிறகு ரிஷப் பண்ட், கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி அப்போது 61 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து இருந்தது.

Story first published: Saturday, June 6, 2026, 15:44 [IST]
Other articles published on Jun 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+