For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஜாம்பவானுடன் பேச நினைத்தேன்.. ஆனால் இன்ஸ்டாகிராமில் பார்த்த போது.. நெகிழ்ந்த விராட் கோலி!

மும்பை: டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் உரையாடிய அனுபவம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

நடப்பாண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வந்தது. ஏற்கனவே டென்னிஸ் தொடரின் ஜாம்பவானான ஃபெடரர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், நடால் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருகிறார்.

IND vs AFG : Novak Djokovic texted me first and then we started talking each other says Indian cricket Virat Kohli ahead of A0 2024

இதனால் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் ஆகியோரை சுற்றியே டென்னிஸ் உலகம் சுழன்று வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரை விளம்பரப்படுத்த ஜோகோவிச், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் உடன் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட்டை விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. அதேபோல் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து, ஜோகோவிச்சிடம் விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஜோகோவிச் பேசுகையில், விராட் கோலியும் நானும் கடந்த சில ஆண்டுகளாக மெசேஜ் மூலமாக நட்பில் இருந்து வருகிறோம். இதுவரை நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நட்புடன் இருந்து வருவது பெருமையளிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு வீரராக அவர் சாதனைகள் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். விராட் கோலியை பற்றி ஜோகோவிச் பேசிய வார்த்தைகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் ஜோகோவிச் குறித்து விராட் கோலி பேசுகையில், நான் ஒருமுறை ஜோகோவிச்சின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த போது, உடனடியாக அவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. அப்போது இன்பாக்ஸ் சென்று பார்த்தேன். ஆச்சரியமளிக்கும் வகையில் அவர் எனக்கு முன்னதாக மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதன்பின் நாங்கள் இருவரும் உரையாடியும், வாழ்த்தும் கூறி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 14, 2024, 11:29 [IST]
Other articles published on Jan 14, 2024
English summary
IND vs AFG : Novak Djokovic texted me first and then we started talking each other says Indian cricket Virat Kohli ahead of A0 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+