For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AFG : இனி ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை ராஜா தான்.. ஆப்பு வைத்த அக்சர் படேல்.. இனி மிஸ்ஸே ஆகாது!

மொஹாலி : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான அக்சர் படேலின் ஆட்டம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் சேர்த்தார். அதேபோல் இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

IND vs AFG : Ravindra Jadeja place in danger after Axar Patel picks 2 wickets for 23 Runs against Afghanistan

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சிவம் துபே 40 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களை விளாசினார். அதேபோல் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 31 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்துகளிலும் 16* ரன்களும் சேர்த்து அசத்தினர்.

இந்த போட்டியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது ஒரு புறம் இருக்க, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் கழற்றிவிடப்பட்ட அக்சர் படேல் மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என்று சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார் அக்சர் படேல்.

ஆனாலும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஜடேஜா வந்ததால், அக்சர் படேலை பிசிசிஐ நிர்வாகம் கழற்றிவிட்டது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியின் முதல் 3 ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியாத போது, உடனடியாக அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார் அக்சர் படேல்.

பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய அவர், தனது 2வது ஓவரிலேயே இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் மீண்டும் தனது 3வது ஓவரில் அச்சுறுத்தலான பேட்ஸ்மேனான ரஹ்மத் ஷாவையும் வீழ்த்த, ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மொத்தமாக 4 ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

என்னதான் ஜடேஜா சிறந்த பேட்ஸ்மேன் என்றாலுன், இடது பக்கம் மட்டுமே அவரால் பவுண்டரிகளை சேர்க்க முடியும். ஆனால் அக்சர் படேல் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை விளாசக் கூடியவர். தற்போது பவுலிங்கிலும் ஜடேஜாவுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேல் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 12, 2024, 8:36 [IST]
Other articles published on Jan 12, 2024
English summary
IND vs AFG : Ravindra Jadeja place in danger after Axar Patel picks 2 wickets for 23 Runs against Afghanistan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+