Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: ஸ்ரேயாஸ் செய்த சொதப்பல்.. 260 ரன் வர வேண்டிய ஸ்கோர்.. பந்தை வீணடித்த கேப்டன்!

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோர் வலுவானதாகத் தெரிந்தாலும், அபிஷேக் சர்மா களத்தில் இருந்தபோதும், அவர் ஆட்டமிழந்த பிறகும் இந்திய அணியின் பேட்டிங்கில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் ஆட்டத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் நிதான ஆட்டம் ஆடி சொதப்பினார்.

IND vs AFG Shreyas Iyer failed to utilise Abhishek Sharma s quick hitting India Settled for 221 runs

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடி தொடக்கம் அளித்தது. முதல் 6 ஓவர்கள் பவர்பிளேயில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் குவித்தது. இதில் அபிஷேக் சர்மா மட்டுமே 22 பந்துகளில் 76 ரன்களை விளாசினார்.

வெறும் 30 பந்துகளில் தனது அதிவேக சதத்தை அடித்த அபிஷேக் சர்மா, 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் இருந்த வரை, அதாவது முதல் 9.5 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்து ஓவருக்கு 14.44 என்ற எக்ஸ்பிரஸ் ரன் ரேட்டில் சென்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணி 260 முதல் 280 ரன்களைக் குவிக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், 10-வது ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. அடுத்த 10.1 ஓவர்களில் (61 பந்துகளில்) இந்திய அணி 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெறும் 79 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் ரன் ரேட் 7.77 ஆகக் கடுமையாகச் சரிந்தது.

தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்த உடனேயே ஒமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வந்த திலக் வர்மா 2 ரன்களிலும், இஷான் கிஷன் 10 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களிலும் அடுத்தடுத்து அவசரப்பட்டு ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இதில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

அபிஷேக் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பிறகு அதிக பந்துகளை சந்தித்தவர் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே. 20 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை. 2 சிக்ஸ் அடித்தார். 20 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் டி20க்கு தேவையான அதிரடியை காட்டத் தவறினார்.

பினிஷர்களாகக் களமிறங்கிய சிவம் துபே 14 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் அக்சர் படேல் 5 ரன்களுடனும், ரவி பிஷ்னோய் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் மற்றும் சாம்சன் மட்டுமே இதில் 158 ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொதப்பினர்.

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு கடைசி 10 ஓவர்களில் சிறப்பாக அமைந்தது. முதல் பகுதியில் முகமது நபியின் ஒரே ஓவரில் 29 ரன்கள், ஃபரூக்கி மற்றும் முஜீப் ஓவர்களில் பவுண்டரிகள் என வாரி வழங்கிய ஆப்கானிஸ்தான், பின்னர் அபாரமாக மீண்டு வந்தது. அஸ்மத்துல்லா ஒமர்சாய் 3 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அப்துல்லா அகமத்சாய் 4 ஓவர்களில் 38 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

'ஓம் நம சிவாய'.. திடீரென பத்மாசனம் போட்டு அமர்ந்த அபிஷேக் சர்மா.. செஞ்சுரி அடித்த உடன் என்ன நடந்தது?

'ஓம் நம சிவாய'.. திடீரென பத்மாசனம் போட்டு அமர்ந்த அபிஷேக் சர்மா.. செஞ்சுரி அடித்த உடன் என்ன நடந்தது?

ரஷித் கான் 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்தாலும், அபிஷேக் சர்மாவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியதோடு ஒரு ரன்-அவுட் மற்றும் 2 கேட்சுகளைப் பிடித்து இந்திய அணியின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.

அபிஷேக் சர்மாவின் அசுர வேக சதத்தால் 221 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியா எடுத்தாலும், அவர் ஆட்டமிழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்டர்கள் காட்டிய தடுமாற்றமும் 3 தேவையில்லாத ரன்-அவுட்களும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

அபிஷேக் சர்மா 30 பந்தில் செஞ்சுரி... மெகா உலக சாதனை.. அரண்டு போன ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Also Read

அபிஷேக் சர்மா 30 பந்தில் செஞ்சுரி... மெகா உலக சாதனை.. அரண்டு போன ஆப்கானிஸ்தான் வீரர்கள்
Story first published: Thursday, September 17, 2026, 21:30 [IST]
Other articles published on Sep 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+