மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தற்போது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுதான் தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
இதனால் ரோகித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் பனிப்போர் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டி20 போட்டிகளில் இனி விளையாடப் போவதில்லை என முடிவெடுத்திருந்த ரோகித் சர்மாவும் விராட் கோலி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு காரணம் ரோகித் சர்மா தமது கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்ததால் தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பதற்கு ரோகித் சர்மா விரும்பவில்லை என்றும் இதனால் டி20 அணியில் விளையாட முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்திய அணியில் இடமே கிடைக்கக் கூடாது என்பதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா ஒரு கட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
அதன்படி ஹர்திக் பாண்டியா தற்போது ஆல்ரவுண்டராக இந்திய அணியில் இருக்கிறார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு பதிலாக சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா சேர்த்து இருக்கிறார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் சிவம் துபே சேர்க்கப்பட்டு அவருக்கு பிளேயிங் லெவனில் இடமே தரப்படவில்லை. மேலும் தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு சிவம் துபே தான் வேண்டும் என்று கேட்டு ரோஹித் சர்மா அணியில் எடுத்திருக்கிறார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கி அதில் அவர் சரியாக விளையாடிவிட்டால் ஹர்திக் பாண்டியாவை ஓரங்கட்டி விட்டு சிவம் துபேவை பிளேயிங் லெவனில் சேர்த்து ஆப்பு வைக்கலாம் என்பதுதான் ரோகித் சர்மாவின் மாஸ்டர் பிளான். இந்திய கிரிக்கெட் அணியில் மறைமுகமாக இரண்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.