Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: பும்ரா எப்போதுமே கிங் தான்.. காயத்திலிருந்து திரும்பிய பிறகு ஆட்டத்தின் 2வது பந்திலே விக்கெட்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே பும்ரா அபாரமாக பந்து வீசி முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இந்திய அணியில் சேர்க்கப்பட்ட பும்ரா காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

அதன் பிறகு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ரா இடம்பெறவில்லை. இந்த தருணத்தில் தான் காயத்திலிருந்து குணமடைந்த பின் பும்ரா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டார்.

Jasprit bumrah

இதில் பும்ரா எவ்வாறு செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் தாம் ஏன் உலகில் முன்னணி பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆட்டத்தில் இரண்டாவது பந்திலே பும்ரா அபாரமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் குர்பாசை ஆட்டம் இழக்க வைத்தார்.

IND vs AFG: வைபவ் சூர்யவன்ஷி அதிரடி நீக்கம்.. பும்ரா உள்ளிட்ட 2 ஸ்டார்கள் கம்பேக்

IND vs AFG: வைபவ் சூர்யவன்ஷி அதிரடி நீக்கம்.. பும்ரா உள்ளிட்ட 2 ஸ்டார்கள் கம்பேக்

இதன் மூலம் குர்பாஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். பும்ரா வீசிய வேகத்தை எதிர்கொள்ள தடுமாறிய குர்பாஸ் பந்தை தொட அது ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த அபிஷேக் ஷர்மாவிடம் பறந்தது. இதனை அவர் அபாரமாக கீழே கையை வைத்து கேட்ச் பிடித்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பும்ரா 350வது விக்கெட்டை கைப்பற்றினார்.

பும்ரா நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பதால் அவருடைய லயன் மற்றும் லெங்த் மற்றும் கொஞ்சம் தடுமாற்றத்தை கண்டார். அவர் வீசிய முதல் இரண்டு ஓவரில் மட்டும் மூன்று ஓயிடுகள் வந்தது. எனினும் அவர் வழக்கம் போல் பேட் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தி முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டது முட்டாள்தனமான முடிவு.. கம்பீரை வெளுக்கும் ரசிகர்கள்

Also Read

வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டது முட்டாள்தனமான முடிவு.. கம்பீரை வெளுக்கும் ரசிகர்கள்

எனினும் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி ஆகியவை பும்ரா ஓவரில் சென்றது. இதன் மூலம் மூன்று ஓவரில் ஆப்கானிஸ்தான அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருக்கிறது.

Story first published: Sunday, September 13, 2026, 20:03 [IST]
Other articles published on Sep 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+