For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயா சாமி.. இவரை நம்பி வேர்ல்டு கப் போனா அவ்ளோதான்.. ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச் எல்லாமே போச்சு!

மொஹாலி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிக மோசமாக செயல்பட்டார் இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல்.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் போட்டியில் கீப்பிங்கில் அவர் செய்த சொதப்பல்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் ஷமி, பும்ரா சிறப்பாக பந்து வீசினர். பின் ஷர்துல் தாக்குர், அஸ்வின் பந்து வீசத் துவங்கிய பின் ஆஸ்திரேலியா ரன் குவிக்கத் துவங்கியது.

IND vs AUS 1st ODI : KL Rahul not good with wicket keeping

அப்போது 22.1வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் அடித்து விட்டு ரன் ஓட முயன்றார். அதற்குள் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் ராகுலிடம் வீசினார் சூர்யகுமார் யாதவ். ஆனால், ராகுல் பந்தை பிடிக்காமல் விட்டுவிட்டார்.

அந்த பந்தை ராகுல் சரியாக பிடித்து இருந்தால் நிச்சயம் ரன் அவுட் செய்து இருக்கலாம். அந்த அளவுக்கு லாபுஷேன் தூரத்தில் ஓடி வந்து கொண்டிருந்தார். இந்த முதல் தவறு இப்படியென்றால் அடுத்ததாக அஸ்வின் பந்துவீச்சில் லாபுஷேன் கொடுத்த கேட்ச் ஒன்றை தவறவிட்டார்.

அப்போது லாபுஷேன் அஸ்வின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றார். ஆனால், பந்து அவரது கிளவுஸில் பட்டு ராகுலிடம் வந்தது. அதை பிடித்து இருந்தால் கேட்ச் ஆகி இருக்கும்.

ஆனால், ராகுல் கிளவுஸில் பட்டு பந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக ஸ்டம்ப்பில் பட்டது. அப்போது லாபுஷேன் காலை லேசாக கிரீஸுக்கு முன்னே வைத்ததால் ஸ்டம்பிங் ஆனது. ஸ்டம்பிங் என அதை கூறினாலும் தவறுதலாகவே இந்த விக்கெட் கிடைத்தது.

அடுத்து ஜடேஜா வீசிய பந்து ஒன்றை பிடிக்கத் தவறினார். கடுப்பான ஜடேஜா அவரிடம் முகத்தை காட்டிவிட்டு சென்றார். மீண்டும் ஒரு முறை பீல்டிங்கில் பந்தை தவறவிட்டார். அப்போது இரண்டாவது ரன் ஓட ஆசைப்பட்டு கிரீன் ரன் அவுட் ஆனார். அதுவுமே அதிர்ஷ்டத்தால் கிடைத்த விக்கெட் தான்.

இந்தப் போட்டியில் ராகுல் அணிக்கு பெரிய பாதகம் செய்யாமல் தப்பித்தாலும், அவரது கீப்பிங் மோசமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அவர் உலகக்கோப்பையில் கீப்பிங் செய்தால் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் ஏற்படும். எனவே, இப்போதே இஷான் கிஷன் வசம் அவர் கீப்பிங் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.

Story first published: Friday, September 22, 2023, 17:55 [IST]
Other articles published on Sep 22, 2023
English summary
IND vs AUS 1st ODI : KL Rahul not good with wicket keepingin the 1st ODI. He missed a run out chance and a catch. Also, he did multiple fielding errors.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+