Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது நாளிலேயே வெற்றியை உறுதி.. இந்தியா செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்.. எப்படி தெரியுமா??

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னும் ஒரே ஒரு விஷயத்தை செய்துவிட்டால் போதும் 2வது நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி தான்.

முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று எளிதாக ரன் குவிக்கலாம் என்ற எண்ணத்துடன் ஆஸ்திரேலியா இருந்த நிலையில், வெறும் 2 ரன்களுக்குள் 2 விக்கெட்களை வாரிகொடுத்து திணறினர்.

திணறிய ஆஸ்திரேலியா

திணறிய ஆஸ்திரேலியா

ஓப்பனிங் வீரர்கள் டேவிட் வார்னர் ( 1 ), உஸ்மான் கவாஜா ( 1 ) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லாபஸ்சாக்னே இருவரும் காப்பாற்றிக்கொண்டு வந்தனர். எனினும் அவர்களால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய ஸ்மித் 37 ரன்களும், மார்னஸ் 49 ரன்களுக்கும் அவுட்டாகினர். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சரிய 177 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகினர்.

இந்திய அணி அபாரம்

இந்திய அணி அபாரம்

முதல் நாளிலேயே தனது இன்னிங்ஸையும் தொடங்கிய இந்திய அணி அட்டகாசமான அடிதளத்தை அமைத்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு மட்டும் 76 ரன்களை சேர்த்தனர். ஒருபுறம் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். மற்றொரு புறம் நிதானமாக பார்ட்னர்ஷிப் தந்த கே.எல்.ராகுல் 71 பந்துகளில் 20 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டானார். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 77 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலைமையில் உள்ளது.

இன்னும் ஒரே ஒரு விஷயம்

இன்னும் ஒரே ஒரு விஷயம்

இந்நிலையில் இந்திய அணி இன்னும் ஒரே ஒரு விஷயத்தை செய்துவிட்டால் 2வது நாளிலேயே வெற்றியை உறுதி செய்யலாம். அதாவது நாக்பூர் பிட்ச்சானது அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு இன்று மோசமாக செயல்படவில்லை. பேட்ஸ்மேன்களுக்கும் ஓரளவிற்கு உதவியாகவே இருந்தது. நாட்கள் போக போக ஏகபோகத்திற்கு ஸ்பின் அதிகரிக்கும். முதல் 2 நாட்களுக்குள் ரன் அடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி பார்த்தால் நாளைய தினத்தை இந்திய அணி சரியாக பயன்படுத்தி 250 ரன்களுக்கும் மேல் அடித்துவிட வேண்டும். அதுவும் நாளை முதல் 2 செஷன்களுக்குள் இந்த இலக்கிற்கு அருகில் சென்றுவிட வேண்டும்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஏனென்றால் இன்னும் 2 செஷன்களுக்கு பிறகு பிட்ச் அச்சுறுத்த தொடங்கலாம். ஒருவேளை இதனை பயன்படுத்தி இந்தியா 250 + ரன்களை அடித்துவிட்டால், அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்ஸில் 300 ரன்களை அடிக்க விட்டால் கூட இந்திய அணிக்கு 200 ரன்களுக்குள்ளாக தான் இலக்கு இருக்கும். இதனால் மற்ற 2 நாட்களை பயன்படுத்தி சுலபமாக வென்றுவிடலாம். எனவே நாளைய தினத்தில் தான் இந்தியாவின் விதி உள்ளது.

Story first published: Thursday, February 9, 2023, 19:54 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+