Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டியில் மழை பெய்யுமா? அடிலெய்டு வானிலை அறிக்கை

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழக்காமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 23) நடைபெறும் இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில், இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில், மழையால் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி (0) மற்றும் ரோஹித் சர்மா (8) ஆகியோர் சொதப்பியது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், அடிலெய்டு மைதானம் இந்திய அணிக்கு, குறிப்பாக விராட் கோலிக்கு, சாதகமாக இருக்கும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

IND vs AUS 2nd ODI India Fights to Stay Alive Can Adelaide Kohli s Fortress Deliver a Win

அடிலெய்டு வானிலை மற்றும் ஆடுகள அறிக்கை:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் மழை பெய்யுமா? அதனால் போட்டி பாதிக்குமா? என்ற கேள்வியும் உள்ளது. பெர்த்தில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், அடிலெய்டில் வானிலை பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி தெளிவான வானிலையே நிலவும் என்றும், மழைக்கான வாய்ப்பு வெறும் 1% மட்டுமே என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அடிலெய்டு ஆடுகளம், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பவுன்ஸ் மற்றும் வேகத்தைக் கொடுக்கும். போட்டி செல்லச் செல்ல, பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும். ஆடுகளம் உலர்ந்தால், ஆட்டத்தின் நடுப்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அடிலெய்டு மைதானம்: கோலியின் ஆதிக்கம்!

அடிலெய்டு ஓவல் மைதானம் இந்திய அணிக்கு ஓரளவு வெற்றிகரமான மைதானமாகவே இருந்துள்ளது. இங்கு விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளில் 9-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2015 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் (107) விளாசியதும் இந்த மைதானத்தில்தான்.

இந்திய வீரர்களில், அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலியின் ஆதிக்கம் அசாத்தியமானது. இங்கு விளையாடியுள்ள 4 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 244 ரன்களை 61 என்ற சராசரியில் குவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து, இந்த மைதானத்தில் 5 சதங்களுடன் 975 ரன்கள் அடித்துள்ளார். தனது முதல் டெஸ்ட் சதத்தையும் கோலி இங்குதான் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ரோஹித் சர்மாவுக்கு அடிலெய்டு மைதானம் அவ்வளவு ராசியானதாக இல்லை. இங்கு விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில், ஒரு அரைசதம் கூட இல்லாமல், 21.83 என்ற சராசரியில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான சாதனை வைத்துள்ள ரோஹித்திற்கு இது ஒரு புள்ளிவிவர முரண்பாடாகவே பார்க்கப்படுகிறது. இந்த மோசமான சாதனையை இம்முறை அவர் மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பைக்கான முன்னோட்டம்:

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி மற்றும் ரோஹித், சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பியுள்ளனர். 2027 உலகக் கோப்பையை மனதில் கொண்டு, ஒருநாள் போட்டிகளில் தங்களது மதிப்பை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருவரும் உள்ளனர்.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மாட் ஷார்ட், மாட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கூப்பர் கொன்னோலி, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Story first published: Wednesday, October 22, 2025, 17:26 [IST]
Other articles published on Oct 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+