Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விசில் போடு.. இந்திய அணிக்காக உறுதுணையாக நின்ற தோனி.. 3வது ஒருநாள் போட்டிக்காக ஸ்பெஷல் திட்டங்கள்!

சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியை எதிர்கொள்வதற்காக எம்.எஸ்.தோனியை நேரில் சந்தித்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆலோசனைப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ப்ளேயிங் 11 குறித்தும் ஐடியா கொடுத்துள்ளாராம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இதனையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும் என தெரிகிறது.

 3வது போட்டி

3வது போட்டி

இந்திய அணி கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தொடரை கூட சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வருகிறது. இதே போல நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் உலகின் நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் அணியாக இடம்பெறுவார்கள். எனவே சொந்த மண்ணில் தோற்றுவிடக்கூடாது என ரோகித் சர்மாவின் படை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு உதவியுள்ளார் எம்.எஸ்.தோனி.

 உதவும் தோனி

உதவும் தோனி

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் பயிற்சிகளுக்காக சேப்பாக்கம் மைதானத்தில் தான் முகாமிட்டுள்ளார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தோனியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது சென்னை மைதானத்தில் தற்போது களம் எப்படி உள்ளது என கேட்டு தெரிந்துக்கொண்டுள்ளனர். தோனி கடந்த 20 நாட்களாக இங்கு தான் பயிற்சி பெற்று வருவதால் அவருக்கு நன்றாக இந்த சூழல் தெரியும்.

 பிட்ச் குறித்த அட்வைஸ்

பிட்ச் குறித்த அட்வைஸ்

சென்னை மைதானத்தின் பிட்ச் வழக்கமாக ஸ்லோவான ஒன்றாக தான் இருக்கும். எனவே சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்கம் இங்கு பெரிதாக இருக்கும். இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேலை நீக்கிவிட்டு ஷர்துல் தாக்கூரை கொண்டு வரலாமா என்ற திட்டம் போடப்பட்டு வந்தது. ஆனால் அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா என 3 ஸ்பின்னர்களுமே இங்கு தேவை என தோனி கூறிவிட்டாராம்.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

எனவே 3வது ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் எந்தவித மாற்றமும் இன்றி இந்திய அணி களமிறங்கவுள்ளது. மேலும் நாளைய போட்டியின் போது தோனியும் இந்திய அணியுடன் இருக்கவுள்ளார். போட்டிக்கு இடையே பல அறிவுரைகளை அவர் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் எப்படியும் இந்தியா வென்றுவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Story first published: Tuesday, March 21, 2023, 20:42 [IST]
Other articles published on Mar 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+