Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS 3வது டி20 - ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்- இந்திய அணியில் முக்கிய மாற்றம்

கவுகாத்தி : இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வெட், முதலில் பந்து வீசுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் முதலில் நாங்கள் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். காரணம் பனிப்பொழிவு மாலையிலிருந்து தொடங்கி இருக்கிறது.

Ind vs aus 3rd t20 - Avesh khan return in to playing xi as india batting first

வானிலை பற்றி எங்களுக்கு நூறு சதவீதம் தெரியவில்லை. களம் தற்போது ஈரமாக காட்சியளிக்கிறது. போகப்போக பணிபொழிவு அதிகமாக தான் இருக்கும் என நினைக்கிறேன். எங்களுடைய வீரர்கள் அனைவரும் நல்ல உடல் மொழியில் இருக்கிறார்கள். இன்றைய போட்டிக்குப் பிறகு சில வீரர்கள் தாயகம் திரும்புகிறார்கள். இன்று ஆட்டத்தில் எங்களுடைய பிளேயிங் லெவனில் மூன்று மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிராவிஸ் ஹெட்,ஜேசன் பெஹ்ரண்டோர்ப், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் அணிக்கு திரும்பிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி தான். ஏனென்றால் எதிர்பார்த்ததை விட முன்பில் இருந்து பனிப்பொழிவு ஏற்பட்டுவிட்டது.

முதல் இரண்டு போட்டியில் நாங்கள் எப்படி விளையாடினோமோ அதை தான் மூன்றாவது போட்டியிலும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்திலும் சில யுக்திகளை பகுத்தறிக்கிறோம். அதனை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். எங்களுடைய அணியில் இன்று ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

முகேஷ் குமாருக்கு பதிலாக ஆவேஸ் கான் அணிக்கு திரும்பிருக்கிறார். முகேஷ் குமார் தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய ஆட்டத்தை விளையாடப் போகிறார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி சார்பாக முகேஷ் குமாருக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என சூரியகுமார் யாதவும் கிண்டல் செய்துள்ளார்.

Story first published: Tuesday, November 28, 2023, 19:21 [IST]
Other articles published on Nov 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+