Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இசான் கிஷன் செய்த மெகா தவறு.. இந்தியாவுக்கு நோ பால் வந்தது ஏன்? ஆட்டமே மாறியது அங்கு தான்

கவுகாத்தி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதற்கு காரணம் விக்கெட் கீப்பர் இசான் கிஷன் செய்த மிகப்பெரிய தவறுதான் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பொதுவாக கடைசி கட்டத்தில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சிறு தவறு செய்தாலும் ஆட்டத்தில் முடிவிலே பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறுவார்கள். அதற்கு சூப்பரான எடுத்துக்காட்டாக இந்த போட்டி அமைந்திருக்கிறது.

Ind vs aus 3rd t20 - Blunder mistake from ishan kishan cost free hit

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி இரண்டு ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது போட்டியின் 19வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். முதல் பந்து பவுண்டரியும் இரண்டாவது பந்து இரண்டு ரன்களும் மூன்றாவது பந்து பவுண்டரியும் சென்றது. சரி கடைசி மூன்று பந்தையாவது சரியாக வீசி விடலாம் என்று அக்சர் பட்டேல் கணக்கு போட்டு இருந்தார்.

அப்போது மேத்யூ வேடுக்கு அக்சர்பட்டேல் வீசிய பந்தை பிடித்த இஷான் கிசன் ஸ்டெம்பிட் செய்தார். இதனை மூன்றாம் நடுவர்கள் ஆராய்ந்து பார்த்தனர். அப்போது இஷான் கிசன் செய்த தவறு ஒன்று மூன்றாம் நடுவருக்கு தெரிந்தது. ஸ்டெம்பை பந்து கடக்கும் முன் எப்போதுமே விக்கெட் கீப்பர் பிடிக்கக் கூடாது. அப்படி செய்தால் அதற்கு நோ பால் வழங்கப்படும். இந்த தவறை தான் இஷான் கிஷன் செய்தார்.

இதனால் கிடைத்த ஃப்ரீ ஹிட்டை பயன்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வெட் சிக்சர் அடித்தார். இதேபோன்று கடைசி பந்தில் மேக்ஸ்வெல் திடீரென்று சுவிட்ச் ஹிட் செய்தார். ஆனால் அவர் பந்தை தவறவிட கீபிங்கில் நின்ற இஷான் கிஷனும் பந்தை பிடிக்காமல் கோட்டை விட்டார்.இதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது. இப்படி இஷான் கிஷன் செய்த தவறால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எளிதாக பத்து ரன்கள் கிடைத்தது.

இன்றைய ஆட்டத்தில் இசான் கிஷன் பேட்டிங்கில் டக் அவுட்டான நிலையில் தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் தடுமாறி இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இஷான் கிசன் மட்டும் இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியா தொடரை வென்று இருக்கும். தவறு செய்வது மனித இயல்பு தான். ஆனால் இப்படி மோசமான தவறு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

Story first published: Tuesday, November 28, 2023, 23:28 [IST]
Other articles published on Nov 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+