ரசிகர்களிடம் சிக்கிய சுனில் கவாஸ்கர்.. ஜடேஜா குறித்து அதிரடி விமர்சனம்.. உண்மையில் என்ன ஆனது ??
இந்தூர்: இந்திய அணியின் தோல்விக்கு ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் காரணம் என சுனில் கவாஸ்கர் குற்றம்சாட்டிய சூழலில் அவருக்கு எதிராக ரசிகர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். உண்மையில் எது தான் காரணம் என்ற பிரச்சினை உருவாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது. இதில் கடைசி வரை போராடிய இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 163 ரன்களும் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் அடித்தது மட்டுமின்றி 88 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 76 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி கண்டது.

இந்திய அணி தோல்வி
இந்த தோல்வியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 2 -1 என பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் கடைசி போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டு என்ற கட்டாயத்திற்கு இந்தியா சென்றுள்ளது. மறுபுறம் அந்த இடத்தை ஆஸ்திரேலியா உறுதி செய்துவிட்டது.

ஜடேஜா காரணமா?
இந்நிலையில் இந்த தோல்விக்கு ஜடேஜா தான் காரணம் என சாஸ்திரி நம்புகிறார். ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது ஜடேஜா வீசிய பந்தில் மார்னஸ் லபுசாக்னே 4வது ஓவரிலேயே அவுட்டாகியிருப்பார். ஆனால் அந்த பந்தை ஜடேஜா நோ பாலாக வீசிவிட்டதால் விக்கெட் மிஸ்ஸானது. இதன் விளைவாக மார்னஸும் - கவாஜாவும் சேர்ந்து 2வது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இதுதான் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் முன்னிலை பெற காரணம்.

கவாஸ்கர் விமர்சனம்
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ஜடேஜா செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நிறைய ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் ஒரு ஸ்பின்னராக இருந்துக்கொண்டு நோ பால் வீசுகிறார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணமாகியுள்ளது. பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்பிரே இதனை மனதில் வைத்து ஜடேஜாவுக்கு ஆலோசனை தர வேண்டும் என அவர் கூறினார்.

ரசிகர்களின் கோபம்
இந்த கருத்தினால் கோபமடைந்துள்ள ரசிகர்கள், ஆட்டத்தில் சில வாய்ப்புகள் வரும், வாய்ப்புகள் போகத்தான் செய்யும், ஆனால் ஓப்பனிங்கில் வீசிய நோ பால் தான் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணம் என எப்படி கூறுவீர்கள். அதன்பிறகு 2 இன்னிங்ஸ்களிலும் ஏன் கம்பேக் தர முடியவில்லை. ரோகித் கூட 2 முறை அதிர்ஷ்டசமாக தப்பித்தார். ஆனா அவரால் சோபிக்க முடியவில்லையே. எனவே விக்கெட் மிஸ்ஸானாலும் அதன்பிறகு எப்படி கம்பேக் தந்தனர் என்று தான் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஜடேஜாவின் கம்பேக்
ஜடேஜா ஒரு விக்கெட்டை தவறவிட்டாலும், தனது தவறை தானே சரி செய்துக்கொடுத்தார். நோ பால் வீசிய பிறகு முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை கைப்பற்றி கொடுத்தார். அந்த 4 விக்கெட்களுமே ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆகும். இதனாலேயே ஜடேஜாவுக்கு ஆதரவுக்குரல் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications