Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை மீண்டும் காப்பாற்றுமா மழை? மெல்போர்ன் டெஸ்ட் 3வது நாள் வானிலை அறிக்கை

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்டில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பெருமளவு மழையால் பாதிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்ததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் தற்போது ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் அடித்திருக்கிறது.

ind vs aus virat kohli rohit sharma melbourne weather forecast vs


இந்த சூழ்நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணி தற்போது 310 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. ஃபாலோ ஆணை தவிர்க்க வேண்டும் என்றால் இந்திய அணி இன்னும் 111 ரன்கள் அடிக்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த டெஸ்ட் போட்டியில் மழை வந்து காப்பாற்றியது போல் இம்முறை மழை பாதிப்பு இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. மெல்போர்னில் சனிக்கிழமை மதியம் மழை பெய்ய 79 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிப்பு தெரிவித்து இருக்கிறது.

இதன் மூலம் மதிய நேரத்திற்கு மேல் போட்டியில் மழை பாதிப்பு இருக்கக்கூடும். மேலும் வானிலை வெப்பம் 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பந்து நன்றாக ஸ்விங் ஆக கூடும்.

இந்தியா மட்டும் ஃபாலோ ஆணை தவிர்த்து விட்டால் மீண்டும் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும் அப்போது மழை பாதிப்பு இருக்கும். ஒருவேளை மழை பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றால் கூட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக வானிலை மாறலாம். மழை பாதிப்பு இருக்கும் என்பதால் ஒருவேளை இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பாலோ ஆன் கொடுக்கலாம். இதனால் இந்திய அணிக்கு நாளை தவிர்ப்பது மிகவும் முக்கியமான பணியாக இருக்கிறது.

Story first published: Friday, December 27, 2024, 23:18 [IST]
Other articles published on Dec 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+