“அவர் ஒன்னும் அடிமை இல்லை”.. இஷானிடம் ரோகித் சர்மா நடந்துக்கொண்ட விதம்.. விளாசும் ரசிகர்கள்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது இஷான் கிஷானை ஒரு மிருகம் போல நினைத்து ரோகித் சர்மா அடிக்க நினைத்ததாக பரவும் வீடியோவால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடிக்க, கேமரூன் கிரீன் அரைசதத்தை அடித்து உதவியதால் முதல் நாளின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்களை குவித்தது.

இந்தியா தடுமாற்றம்
அகமதாபாத் பிட்ச்சானது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க போராடி வருகின்றனர். இது போன்ற சூழல்களில் கேப்டன் ரோகித் சர்மா பதற்றத்துடன் இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.பலமுறை வீரர்களை திட்டிவிட்டு, பின்னர் சிரித்துப்பேசிக்கொண்டிருப்பார்.

புதிய பிரச்சினை
இந்நிலையில் தற்போது செய்துள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் ஆட்டத்தின் போது, இஷான் கிஷான் வாட்டர் பாயாக வந்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்துவிட்டு சென்றார்ல். அவர் செல்லும் போது திடீரென பாட்டில் கீழே விழ, மீண்டும் அவசர அவசரமாக எடுத்தார்.

ரோகித்தின் செயல்பாடு
இதனை பார்த்த ரோகித் சர்மா, அதை கூட பிடிக்க மாட்டியா? என்பது போல இஷானை அடிக்க கையை ஓங்கினார். இதனை அவர் விளையாட்டாக செய்தாரா? இல்லை நிஜமாகவே கோபத்தில் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இஷானுக்கு கொடுமை செய்வதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

2வது வீடியோ
இஷான் - ரோகித் இடையே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல் முறையல்ல. 3வது டெஸ்டின் போது டக் அவுட்டில் அமர்ந்திருந்த ரோகித் இஷானை அழைத்து, கடும் கோபத்துடன் திட்டத்தை விளக்கிய வீடியோ இணையத்தில் பரவியது. அதற்கு அடுத்த ஓவரிலேயே புஜாரா சிக்ஸர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications