Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ரோகித் சர்மா படைக்கப் போகும் 5 பிரம்மாண்ட சாதனைகள்.. விராட் கோலி சீன்லயே இல்ல!

மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா 5 சாதனைகளை படைக்க வாய்ப்புகள் அமைந்துள்ளது. அந்த சாதனைகள் விவரம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலமாக மெல்போர்ன் புறப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

5 Major Records that Rohit Sharma

ஐபிஎல் தொடருக்கு பின் நீண்ட மாதங்களாக ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வில் இருந்து வருகின்றனர். இதனால் இவர்களின் இருவரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 3 சாதனைகளை படைக்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

இதுவரை 273 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் சர்மா 344 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு 8 சிக்சர்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதனை அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்த தொடரில் ரோகித் சர்மா 54 ரன்களை சேர்த்தால், இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க முடியும். இந்திய ஜாம்பவான் சவுரவ் கங்குலி 11,168 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், ரோகித் சர்மா 11,121 ரன்களுடன் இருக்கிறார். முதலிடத்தில் சச்சின் 18,426 ரன்களும், 2வது இடத்தில் விராட் கோலி 14,181 ரன்களையும் சேர்த்துள்ளனர்.

அதேபோல் ரோகித் சர்மா இன்னும் ஒரு சதம் விளாசினால், இந்திய கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய 3வது இந்திய வீரர் என்ர சாதனையை படைக்க முடியும். இதில் சச்சின் 100 சதங்களையும், விராட் கோலி 82 ரன்களையும், ரோகித் சர்மா 49 சதங்களையும் விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதேபோல் 12 சிக்சர்களை விளாசினால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 100 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்களை அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால், சச்சினின் 9 சதங்கள் சாதனையை சமன் செய்ய முடியும்.

Story first published: Wednesday, October 15, 2025, 17:40 [IST]
Other articles published on Oct 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+