Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி நீதான்யா.. 22 ஆண்டுகளுக்கு பின் புதிய வரலாறு படைத்த ஜஸ்பிரிட் பும்ரா!

அடிலெய்ட்: நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார். இதன் மூலமாக 22 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடிலெய்ட் மைதானத்தில் முதல் பேட்டிங் ஆடிய போதும், இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ind vs aus border gavaskar trophy jasprit bumrah

இதனால் இந்திய அணி சிக்கலை இருப்பதாக பார்க்கப்பட்டது. இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் உஸ்மான் கவாஜா - மெக்ஸ்வீனி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் அடுத்தடுத்து அட்டாக் செய்து கொண்டே இருந்தனர். 10 ஓவர்கள் கடந்த போதும் இந்திய அணி முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் தடுமாறியது.

அப்போது 11வது ஓவரை பும்ரா வீசுவதற்காக வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் உஸ்மான் கவாஜா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் பும்ரா 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பாண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அதேபோல் 22 ஆண்டுகளுக்கு பின் ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய வரலாற்றை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1979ஆம் ஆண்டு 74 விக்கெட்டுகளையும், 1983 ஆகிய ஆண்டு 75 விக்கெட்டுகளையும் கபில் தேவ் வீழ்த்தி இருந்தார். அதன்பின் 2002ஆம் ஆண்டு ஜாகீர் கான் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையடுத்து 22 ஆண்டுகளில் பின் பும்ரா மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை ஒரே ஆண்டில் இந்திய பவுலர்கள் 17 முறை 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தியுள்ளனர். இந்த 17 முறையில், பும்ராவின் பவுலிங் சராசரியான 15.14 என்பதே மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பும்ராவை பாராட்டி வருகின்றனர்.

Story first published: Friday, December 6, 2024, 15:55 [IST]
Other articles published on Dec 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+