Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றி தான் ஆஸ்திரேலியா வென்றது? உலகின் பணக்கார வாரியமாக இருந்தும் தடுக்க தவறிய BCCI..என்ன நடந்தது?

மும்பை : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயை ஏமாற்றி தான் இந்த வெற்றியை பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது ஆஸ்திரேலியா ஆடுகளங்களிலேயே இந்தியாவின் ஆட்டத் திறனுக்கு ஏற்ற மைதானம் என்றால் அது அடிலெய்ட் கிரிக்கெட் மைதானம் தான். ஏனென்றால் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானம் முற்றிலும் ஆசிய கண்டங்களில் இருப்பது போல் இருக்கும்.

ind vs aus rohit sharma india vs australia vs

இங்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும். இங்கு பெரிய அளவு பவுன்ஸ் ஆகாது. மேலும் இரண்டு, மூன்று ஓவர்களை தாண்டி பந்தும் ஸ்விங் ஆகாது. இதனால் இந்திய அணி வீரர்கள் காலம் காலமாகவே அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

2002 -03 சுற்றுப்பயணத்தில் ராகுல் டிராவிட் லக்ஷ்மன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அடிலெய்ட் அடிமைதானத்தில் தான் வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இந்த அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். இதுவரை மூன்று சதம் அங்கு அடித்திருக்கிறார்.இதனால் இந்த மைதானத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்பதை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கக் கூடாது என்பதற்காக பிங்க் நிற பந்து டெஸ்ட் போட்டியை இங்கு நடத்துகிறது.

இதன் மூலம் இந்தியாவுக்கு இருக்கும் சாதகமான சூழலை மாற்றும் முயற்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு வருகிறது. பெயருக்கு தான் இது பகல் இரவு டெஸ்ட் என்றாலும், அடிலெய்ட் நகரில் மாலை ஏழு மணி வரை கூட வெயிலின் வெளிச்சம் இருக்கும். இதனால் இங்கு பகல் இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது என்பது ஏற்ற விஷயமாக கருதப்படாது.

ஆனால் மற்ற அணிகள் அடிலெய்டில் அபாரமாக விளையாடுவதை புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே இங்கு மட்டும் பிங்க் நிற டெஸ்ட் பாலை வைத்து இருக்கிறது. ஆஸ்திரேலியா இதுவரை அடிலெய்ட் பிங்க் நிற டெஸ்ட் பந்தில் தோற்றதே கிடையாது. அடிலெய்ட் பதிலாக வேறு இடத்தில் பிங்க் டெஸ்ட் பாலை ஆஸ்திரேலிய வெஸ்ட் இண்டீஸ் எதிராக பிரஸ்பென் நகரில் வைத்து அதில் தோல்வியை தழுவியது.

இதனால் மீண்டும் இந்த பிங்க் நிற டெஸ்ட் பந்தை அடிலெய்ட் நகரிலே நடத்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா நினைத்து சிறப்பாக திட்டத்தை தீட்டி விட்டது. வழக்கம் போல் உலகின் பணக்கார நாடான இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்தியாவின் பகல் நேரத்தில் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் காசு பார்க்கலாம் என்பதற்காக ஒப்பு கொண்டு விட்டது. இதனால் இனி ஆஸ்திரேலியாவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்க கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Sunday, December 8, 2024, 16:30 [IST]
Other articles published on Dec 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+