Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- கோலி, ரோகித் கடைசி ஆட்டத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ஆஸ்திரேலிய வர்ணணையாளர்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் விளையாடினர். இந்த ஜோடி கடைசி முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறது.

குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த ஜோடி 168 ரன்களை சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. ரோகித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்களும், விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார். சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் பல ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

Ind vs Aus

அப்போது சென் கிரிக்கெட் என்ற சேனலில் பணியாற்றிய ஆஸ்திரேலிய வர்ணனையாளர் ஒருவர் விராட் கோலி ரோகித் சர்மாவை இனி நாம் பார்க்கப் போவதில்லை என நினைத்து கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த தொடரில் ஒரு அரை சதம், ஒரு சதம் அடித்ததால் ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். மறுமுனையில் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில் மூன்றாவது போட்டியில் தன்னுடைய தலைமையை நிரூபித்து இந்திய அணியில் தமக்கு இடம் இன்னும் இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

தற்போது இரு அணிகளும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி புதன்கிழமை விளையாடுகிறது. 2027 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மாவும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இனி வரும் நவம்பர் 30-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இருவரும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார்கள் என தெரிகிறது.

Story first published: Monday, October 27, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+