Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இக்கட்டான நிலையில் இந்தியா.. வலுவான இலக்கை நோக்கி ஆஸி... சிட்னியில் என்ன நடக்கிறது.. பின்னணி!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி மிகவும் வலுவான இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 இந்தியா

இந்தியா

அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்கத்தில் அதிரடியாக ஆடி வந்த இந்தியா அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. கில், புஜாரா அரைசதம் அடித்து இருந்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

மோசம்

மோசம்

அதன்பின் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியது. ஒரு பக்கம் பண்ட் காயம் அடைந்து பெவிலியன் திரும்பினார். அதேபோல் ஜடேஜாவும் காயம அடைந்து வெளியேறினார்.

இந்திய அணியின் நிலை

இந்திய அணியின் நிலை

இதனால் இந்திய அணி மோசமான நிலையில் சிக்கியது. ஜடேஜா இல்லாமல், பண்ட் கீப்பிங் செய்யாமல் தற்போது இந்திய அணி விளையாடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 220 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்மித்

ஸ்மித்

அதிரடியாக ஆடி வந்த ஸ்மித் விக்கெட்டை அஸ்வின் எடுத்துள்ளார். ஸ்மித் 81 ரன்களுக்கும், மார்னஸ் 73 ரன்களுக்கு அவுட்டாகி உள்ளனர். இந்தியாவை விட ஆஸ்திரேலியா தற்போது 323 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது .

Story first published: Sunday, January 10, 2021, 8:44 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+