பிரிஸ்பேன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் பிரிஸ்பென் நகரில் 5 நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த ஐந்து நாட்களிலே இரண்டாவது நாள் மட்டும்தான் மழை குறுக்கீடு இருக்காது என்றும் அடுத்த மூன்று நாட்களும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மழை பாதிப்பு இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணி 350 ரகளை தாண்டிய உடனே டிக்ளேர் செய்துவிட்டு இந்தியாவை பேட்டிங் செய்ய பணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். தற்போது 102 ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் எடுத்து இரண்டாவது நாளை முடித்துக் கொண்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு பின் இருக்கும் காரணம் என்ன என்று தற்போது பார்க்கலாம். மழை பாதிப்பு இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக பேட்டிங் செய்ய முயற்சி செய்யாது. இதன் மூலம் முதலில் சுமார் 500, 600 ரன்ளை அடித்து விட்டு அதன் பின் எஞ்சி இருக்கும் நாளில் இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்து ஃபாலோ ஆனை கொடுக்கலாம் என்பதுதான் ஆஸ்திரேலியாவின் ஐடியாவாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணியை 500 ரன்கள் தொட விடாமல் 445 ரன்களில் இந்திய வீரர்கள் ஆல் அவுட்டாக்கினர்.
இதன் மூலம் மழை குறுக்கிட்டாலும், இந்தியாவின் 20 விக்கெட்டுகளை மூன்று நாள்களில் வீழ்த்துவது என்பது மிகவும் எளிது என்பதால் இந்த திட்டத்தை ஆஸ்திரேலியா எடுத்திருக்கிறது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்நோக்கி இந்தியா உள்ளது. இந்த சூழலில் இந்தியா இந்த போட்டியில் தோல்வியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ஓவர்களை எதிர்கொண்டு பாலோ ஆனை தவிர்க்க வேண்டும். பாலோ ஆனை தவிர்த்தால் மட்டுமே இந்த போட்டி டிராவை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கிறது.