இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.
முதல் நாள் ஆட்டம் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. பும்ராவை தவிர மற்ற வீரர்கள் யாரும் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வினி 9 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.
ஸ்மித் 11 ரன்களில் வெளியேற, டிராவிஸ் ஹெட் 151 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்ற ஸ்கோர் உடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அதிரடியாக விளையாட முற்பட்ட மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டை பும்ரா 18 ரன்களில் கைப்பற்றினார்.
இதனை அடுத்து நாதன் லயன் நிதானமாக விளையாடி 30 பந்துகளில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜ் அவரை போல்டாக்கினார். அலெக்ஸ் கெரி மட்டும் ஒருபுறம் நின்று அதிரடி காட்ட அவருடைய விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார். 88 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணி 117.1 ஓவரில் 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் கைப்பற்றியது.