Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் இங்கு தான் பெரிய குறை இருக்கிறது.. அதை சரி செய்தால் போதும்- பயிற்சியாளர் மோர்கல்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பும்ராவைத் தவிர மற்ற பவுலர்கள் அனைவரும் தடுமாறி இருக்கிறார்கள். குறிப்பாக சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் பந்துவீச்சில் தடுமாறி வந்தனர். சிராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிருந்து சில மணி நேரம் விலகி இருந்தார்.

இந்த நொடியில் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தடுமாறியதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் முதலில் ஆஸ்திரேலிய வீரர் ஹெட் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

ind vs aus jasprit bumrah isa guha india vs australia vs


அவர் எங்களுக்கு எதிராக அபாரமாக ரன் சேர்த்தார். எங்கள் அணியில் நாங்கள் ஒரு இடத்தில் மட்டும் தவறு செய்கின்றோம். பந்துவீச்சில் 50வது ஓவரிலிருந்து எண்பதாவது ஓவர் வரை நாங்கள் சரியாக செயல்படவில்லை. இந்த கட்டத்தில் தான் நாங்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கின்றோம். இந்த இடத்தில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தி எங்களுடைய குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இன்றைய நாளில் தொடக்கத்தில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம் என நினைக்கின்றேன். 70 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனால் இரண்டு உலக தரம் வாய்ந்த வீரர்கள் எங்களிடமிருந்து போட்டியை கவர்ந்து சென்று விட்டார்கள். ஸ்மித்தும் டிராவிஸ் ஹெட்டும் உண்மையிலேயே எங்களை நெருக்கடிக்கு ஆக்கினார்கள்.

எங்களிடம் போட்டிக்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தினோமா என்பது தான் கேள்வியாக இருக்கிறது. இதிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு முனையில் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு துணை புரியும் வேகப் பந்துவீச்சாளர் தேவை.

ஆனால் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருவருமே விக்கெட்டுகள் கிடைக்க போராடினார்கள். சிராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.எனினும் மீண்டு வந்து புதிய பந்தில் அவர் பந்து வீசியது மகிழ்ச்சி அளித்தது. புதிய பந்தில் ஆகாஷ் நன்றாகவே பந்து வீசினார். இதே பழைய பந்தை வைத்து இந்திய அணி வீரர்களால் மூன்று விக்கெட்டுகள் ஈசியாக எடுத்திருக்க முடியும்.ஆனால் அப்படி நடைபெறவில்லை. இதுதான் கிரிக்கெட்டின் இயல்பே என்று மோர்னே மோர்க்கல் கூறியுள்ளார்.

Story first published: Sunday, December 15, 2024, 22:49 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+