Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி வேற ஒரு ரோகித் சர்மாவை பார்ப்பீங்க.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பிராட் ஹாடின் எச்சரிக்கை

மும்பை: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். வெறும் சாதாரண வீரராக தான் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின், ரோகித் சர்மா தற்போது கேப்டன் பதவியில் இல்லாததால் எந்த ஒரு சுமையும் இன்றி அதிரடி காட்டுவார் என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Brad Haddin on Rohit

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "நீங்கள் மைதானத்திற்கு சென்று விராட் கோலி, ரோஹித் சர்மாவை காணுங்கள். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்கள் அவர்கள். நமது நாட்டிற்கு கடைசியாக ஒருமுறை வந்து விளையாடப் போகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை யாரும் வீணடிக்க வேண்டாம்."

"அது மட்டும் அல்லாமல் கில் போன்ற ஒரு சிறந்த இளம் வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு இருந்த சுமை நீங்கி விட்டது. இதனால் அவர் அதிரடி காட்டி விளையாடுவார். அது மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா இருக்கின்றார். அவரை பார்ப்பதற்காக உங்களுடைய பணத்தை நீங்கள் கண்டிப்பாக செலவழிக்க வேண்டும். ஏனென்றால் அவர் மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர்."

"அவரை பார்ப்பதற்கு நான் ஆவலுடன் இருக்கின்றேன். தற்போது இருக்கும் சர்வதேச t20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றார். அதுவும் குறுகிய போட்டிகள் மட்டுமே அவர் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். நான் கண்டிப்பாக சொல்வேன். நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் அவர் நிச்சயம் தகுதியாக இருப்பார்" என்று பிராடு ஹாடின் கூறியுள்ளார்.

இதுவரை 24 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள அபிஷேக் சர்மா,849 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 36 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 196 என்ற அளவில் உள்ளது. இதில் இரண்டு சதம், ஐந்து அரை சதம் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அவர் 135 ரன்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Thursday, October 9, 2025, 21:41 [IST]
Other articles published on Oct 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+