இதை எல்லாம் ஆரம்பிச்சு வைச்சதே கங்குலி தான்.. என்ன செய்வார் தெரியுமா? ஆஸி. வீரர் சர்ப்ரைஸ்!
பிரிஸ்பேன் : கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் போட்டிகள் என்றாலே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
ஆனால், இது தொடங்கியது சவுரவ் கங்குலி கேப்டன்சியில் தான் என கூறி உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்.
ஸ்டீவ் வாஹ் கேப்டனாக இருந்த போது கங்குலி எப்படி ஆஸ்திரேலிய அணியை மிரள வைத்தார் என கூறி உள்ளார்.

டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா தோல்வி அடைந்ததால் முதல் போட்டி வரை அமைதி காத்த ஆஸ்திரேலியா அதன் பின் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியா அசத்தல்
இந்திய அணியும் அதற்கெல்லாம் சளைக்காமல் மூன்றாவது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்து ஆஸ்திரேலிய அணியை வெறுப்பேற்றியது. ஆஸ்திரேலிய அணி உண்மையில் இப்போது கடும் அழுத்தத்தில் உள்ளது. வெற்றி பெற வேண்டிய போட்டியை டிரா செய்ததோடு, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரையும் இழக்க நேரிடும்.

திருப்பி அடித்த கேப்டன்
இந்த நிலையில், இந்திய அணியை இப்படி திருப்பி அடிக்கும் அணியாக மாற்றியது பிராட் ஹாக் தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலிய அணி எப்போது இந்தியா சென்றாலும் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்த எண்ணியதாகவும், அப்போது கங்குலி தான் அதை எதிர்த்து நின்ற முதல் கேப்டன் என்றும் கூறி உள்ளார்.

ஸ்டீவ் வாஹ் சம்பவம்
டாஸ் போட வரும் போது ஸ்டீவ் வாஹ்-வை காக்க வைத்த சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார் பிராட் ஹாக். அது ஆஸ்திரேலிய அணியுடன் லேசான மோதலையும், சவாலையும் துவக்கி வைத்ததாக அவர் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications