For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை அவரை இப்படி பார்த்ததே இல்லை.. மிரண்ட கோலி.. கடைசி வரை களத்தில் நின்ற பும்ரா.. என்னா பேட்டிங்!

சிட்னி : ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா பேட்டிங்கில் கலக்கினார்.

அவர் இதுவரை பேட்டிங்கில் 10 ரன்கள் எடுத்தாலே பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்தப் போட்டியில் அவர் அரைசதம் அடித்து மிரட்டினார். இந்திய அணி மிக மோசமாக ஆடிய நிலையில் பும்ராவின் பேட்டிங் தான் ஓரளவு அணியின் மானத்தை காத்தது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. லாக்டவுனுக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான். அதனால், இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயார் ஆகும் வகையில் பகல் - இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ - இந்தியன்ஸ் அணி மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

கோலி, புஜாரா இல்லை

கோலி, புஜாரா இல்லை

இந்தப் போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்களான விராட் கோலி, புஜாரா உள்ளிட்டோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர். கேஎல் ராகுலும் இந்த பயிற்சிப் போட்டியில் ஆடவில்லை. ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்திய வீரர்கள் சொதப்பல்

இந்திய வீரர்கள் சொதப்பல்

ப்ரித்வி ஷா 40, ஷுப்மன் கில் 43 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்தனர். மயங்க் அகர்வால் 2, ரஹானே 4, ஹனுமா விஹாரி 15, ரிஷப் பண்ட் 5, சாஹா 0, நவ்தீப் சைனி 4, ஷமி 0 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

பும்ரா அதிரடி

பும்ரா அதிரடி

இந்திய அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் பும்ரா கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் குவித்தார். அவர் அப்படி ரன் குவித்து யாருமே பார்த்ததில்லை. 6 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார்.

மிரண்ட கோலி

மிரண்ட கோலி

பும்ரா சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்த ஸ்டைலை பார்த்து கேப்டன் கோலி மிரண்டு போய் துள்ளிக் குதித்தார். 57 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார் பும்ரா. சிராஜ் 22 ரன்கள் குவித்து அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

பும்ராவால் ரன் குவிக்க முடியாதது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது. அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 2.9 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் அரைசதம் அடித்து தன்னால் பேட்டிங் செய்ய முடியும் என் நம்பிக்கை அளித்து இருப்பது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்திய அணி இந்தப் போட்டியில் மோசமான செயல்பாடு காரணமாக 48.3 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. பும்ரா அதிகபட்ச ரன்களை எடுத்து இருந்தார். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் அதிக பந்துகளை சந்தித்த வீரர்களின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Friday, December 11, 2020, 19:05 [IST]
Other articles published on Dec 11, 2020
English summary
IND vs AUS : Bumrah hit fifty in pink ball practice match against Australia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+