Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாசிம் அக்ரம் வலது கையில் பவுலிங் செய்தால் எப்படி இருக்கும்.. அதுதான் பும்ரா.. ஜஸ்டின் லாங்கர்!

மெல்போர்ன்: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவாம் வாசிம் அக்ரம் வலதுகையில் பவுலிங் செய்தால் எப்படி இருக்குமோ, அப்படிதான் பும்ராவின் பவுலிங் இருப்பதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார். பும்ராவை எதிர்த்து பேட்டிங் செய்ய ஒருநாளும் விரும்ப மாட்டேன் என்று கூறிய அவர், பும்ராவின் கைகளில் இருந்து வருவதை போல் எந்த பவுலரின் கைகளில் இருந்து பந்து வந்தாலும் பேட்ஸ்மேன்கள் பாடு திண்டாட்டம் என்று கூறியுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இதுவரை முடிவடைந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்கின்றன. அடுத்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால் கூட இந்திய அணியால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும். இதனிடையே விராட் கோலிக்கு பின் ஆஸ்திரேலியா ரசிகர்களால் அதிகம் வெறுக்கக் கூடிய மற்றும் ரசிக்கக் கூடிய வீரராக பும்ரா மாறியுள்ளார்.

ind vs aus bumrah wasim akram vs


இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்சித் ராணா, அஸ்வின், ஜடேஜா என்று யார் பவுலிங் செய்தாலும் கொஞ்சம் கூட அச்சமடையவதில்லை. ஆனால் பும்ரா பவுலிங் செய்ய வந்தால், பரபரப்பாகி விக்கெட்டை பறிகொடுத்து சென்றுவிடுகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், பும்ராவால் எளிதாக இரு பக்கமும் ஸ்விங் செய்ய முடிகிறது. பும்ராவின் கைகளில் இருந்து வருவதை போல் எந்த பவுலரின் கைகளில் இருந்து பந்து ரிலீஸானாலும் பேட்ஸ்மேன்களுக்கு திண்டாட்டம் தான். அதனால் பும்ராவை எதிர்த்து பேட்டிங் செய்வதை ஒருநாளும் விரும்ப மாட்டேன். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் எப்படியோ அப்படிதான் பும்ராவும்.

என்னை பொறுத்தவரை வாசிம் அக்ரம் வலதுகையில் பவுலிங் செய்தால் எப்படி இருக்குமோ, அப்படிதான் பும்ராவின் பவுலிங் உள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் யார் என்ற கேள்விக்கு, வாசிம் அக்ரமின் பெயர் தான் பதிலாக இருக்கும். ஏனென்றால் அவராலும் இரு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். அவர் பந்தின் தையலை பிடித்து பவுலிங் செய்யும் போது, அனைத்தும் சரியாக இருக்கும்.

வாசிம் அக்ரமை போல் பந்தின் தையலை பிடித்து சரியாக பவுலிங் செய்யும் போது, சூழல் ஸ்விங்கிற்கு சாதகமாக அமைந்தால் அவ்வளவு தான். ஒன்று அந்த பந்து பவுண்டரியை எட்டும், அல்லது விக்கெட்டை வீழ்த்தும். அக்ரம் அப்படியான பந்துகளை தான் அதிகம் வீசுவார். அவரை எதிர்த்து விளையாடுவதே பயங்கரமான கனவை போல் இருக்கும். பும்ராவின் இப்போது அப்படிதான் பவுலிங் செய்கிறார் என்று பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து அடுத்த 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி குறித்து பேசுகையில், டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமனில் இருப்பதால் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன். நிச்சயம் சில வீரர்கள் குறித்து ஆலோசனை நடக்கும். ஆனால் அதே அணியை மீண்டும் அறிவிப்பார்கள் என்று மனம் சொல்வதாக கூறியுள்ளார்.

Story first published: Friday, December 20, 2024, 8:00 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+