Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: குல்தீப் சுத்த வேஸ்ட்.. இவருக்கு கேதர் ஜாதவே தேவலாம்.. இந்த ரெக்கார்டை பாருங்க

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு மோசமான ரெகார்டை படைத்திருக்கிறார். துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருக்கும். இங்கு போட்டி செல்ல செல்ல ஆடுகளம் மிகவும் மெதுவாக மாறிவிடும்.

இதனால் ரன் குவிப்பு மிகவும் கடினமாக இருக்கும். துபாயில் நடப்பு தொடரில் இன்றைய ஆட்டத்தை சேர்த்து மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அடித்த 264 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

Champions Trophy 2025 Ind vs Aus Rohit sharma virat kohli

இதனால் இந்திய அணி கஷ்டப்பட்டு தான் சேஸிங் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் தான் ஆஸ்திரேலிய அணியை 240 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தியா விளையாடியது. ஆனால் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்ததை விட கூடுதலாக அடித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் குல்தீப் தான் என தெரியவந்துள்ளது.

இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜடேஜா என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். ஆனால் குல்தீப் யாதவ் மட்டும் தான் எட்டு ஓவர்கள் வீசி வெறும் 44 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் குல்தீப், இதுவரை ஐசிசி ஒருநாள் தொடரின் நாக் அவுட் சுற்றில் இதுவரை ஒரு விக்கெட் மட்டும்தான் எடுத்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில் குல்தீப் யாதவின் பவுலிங் ஆவரேஜ் 156 ஆகும். மேலும் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2024 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி என மூன்று நாக்அவுட் போட்டிகளிலும் குல்தீப் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் குல்தீப் இப்படி மோசமாக செயல்படுவது தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குல்தீப் யாதவை விட பேட்ஸ்மேன் ஆன கேதர் ஜாதவ் இதுவரை ஐசிசி ஒருநாள் நாக்அவுட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருடைய பௌலிங் சராசரி வெறும் 16 என்ற அளவில் தான் இருக்கிறது. இதனால் குல்தீப் யாதவ் நாக் அவுட் சுற்றுகளில் சரியாக செயல்படவில்லை என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

Story first published: Tuesday, March 4, 2025, 19:40 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+