Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஐசிசி தொடரில் உலகில் யாருமே செய்யாத சாதனை.. மாபெரும் ரெக்கார்ட் படைத்த ரோகித் சர்மா

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்று வரும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73 ரன்களையும், அலெக்ஸ் கெரி 61 ரன்களையும் எடுத்திருந்தார். இதை அடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

Champions Trophy 2025 Ind vs Aus Rohit sharma virat kohli

துபாய் ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் முதல் பத்து ஓவரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா களமிறங்கினார். இந்த சூழலில் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐசிசி 50 ஓவர் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

ரோகித் சர்மா 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் கடைசி நேரத்தில் சேர்க்கப்படவில்லை. இதனால் மனமடைந்து இருந்தார். எனினும் 2013 சாம்பியன்ஸ் டிராபி 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை, 2023 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி தொடர்களில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இதில் ரோகித் சர்மா மொத்தமாக 65 சிக்சர்கள் அடித்து ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 64 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் மேக்ஸ்வெல் 49 சிக்ஸர் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

டேவிட் மில்லர் 44 சிக்சர் உடன் நான்காவது இடத்திலும், கங்குலி மற்றும் டேவிட் வார்னர் தலா 42 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றார்கள். ரோகித் சர்மா 14 ரன்கள் இருந்த போது பெண் பந்து வீச்சில் கொடுத்த ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை மார்னஸ் லாபஸ்சேன் தவறவிட்டார். இதனை ரோகித் சர்மா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Story first published: Tuesday, March 4, 2025, 19:08 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+