Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஜடேஜா பவுவிங் வீச கூடாது.. தடுத்து நிறுத்திய நடுவர்.. கடுப்பான ரோகித்.. என்ன நடந்தது?

துபாய்:சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஜடேஜா பந்து வீசியபோது நடுவர் உடனே தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரை இறுதி போட்டியில் இரு அணிகளும் கடுமையாக பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 39 ரன்களிலும் கூப்பர் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

Champions Trophy 2025 Ind vs Aus Rohit sharma Jadeja

இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஸ்மித், மார்னஸ் ஜோடி விளையாடி வந்தது. அப்போது ஆட்டத்தில் 18வது ஓவரை ஜடேஜா வீச வந்தார். அப்போது திடீரென்று நடுவர் ஜடேஜாவை பந்து வீசக்கூடாது என்று கூறி தடுத்து விட்டார். தொடர்ந்து ஜடேஜா கையில் காயம் ஏற்படாமல் இருப்பதற்காக Band aid-ஐ கையில் சுற்றி இருந்தார்.

இந்த Band aid- உடன் தாங்கள் பந்து வீசக்கூடாது என்றும் இதை கழற்றினால் மட்டுமே பந்து வீச தான் அனுமதி அளிப்பேன் என்றும் நடுவர் கூறினார். இதற்கு ஜடேஜா எதிர்ப்பு தெரிவித்து, தான் ஏன் அதனை கட்டி இருக்கிறேன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதனை அடுத்து ரோகித் சர்மா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஜடேஜா Band aid-ஐ கையில் எடுக்காத வரை அவர் பந்து வீச முடியாத என கூறினார்.

Champions Trophy 2025 Ind vs Aus Rohit sharma Jadeja

உடனே ஜடேஜா பரவாயில்லை இது இல்லாமலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கூறி Band aid-ஐ கழற்றி விட்டு பந்தை வீசத் தொடங்கினார். எரியிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் நடுவரின் செயல் இருந்ததால், ஜடேஜா தன்னுடைய கோபத்தை பந்து வீச்சில் காட்டினார். தன்னுடைய அபாரமான செயல்பாட்டால் மார்னஸ் விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.

பந்து சேதம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக நடுவர் இவ்வாறு செயல்பட்டு இருக்கலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அரையிறுதி போட்டியில் களத்தில் இருந்த ரிச்சர்ட் லில்லிங்வொர்த் மற்றும் கிரீஸ் கேப்னி என இரு நடுவருமே இந்திய வீரர்களிடம் கொஞ்சம் கரார் காட்டுவதாக ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, March 4, 2025, 16:50 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+