Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய கேப்டனை பிடிக்கவில்லையா? அப்போ பாகிஸ்தானுக்கு போங்க..யுவராஜ் தந்தை யோக்ராஜ் சாடல்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல் பருமனாக இருப்பதை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சமா முஹம்மது தெரிவித்த கருத்து தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

இது குறித்து விமர்சித்து இருந்த சமா முஹம்மத் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும். மிகவும் உடல் பருமனாக இருக்கின்றார். பார்ப்பதற்கே ஆர்வத்தை தூண்டாத கேப்டனாக விளங்குகிறார் என்று சமா முஹம்மத் விமர்சித்து இருந்தார்.

Champions Trophy 2025 Ind vs Aus Rohit sharma shama mohamed

இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், சமா முஹம்மதை பாகிஸ்தானுக்கு சொல்லுங்கள் என குற்றம் சாட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர்," நான் ஒரே ஒரு விஷயத்தை தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்."

"எந்த விஷயம் ஒருவருக்கு நன்றாக வருகிறதோ, அதை அவர்கள் செய்ய வேண்டும். அதைப்பற்றி தெரியாமல் வேறு யாரேனும் அந்த வேலையை செய்தால் அது கெட்டுப் போய்விடும். இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் என்னுடைய வாழ்க்கையை விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நாட்டிற்காக பெருமை சேர்த்த ஒரு வீரரை குறித்து அரசியல் கட்சியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் இப்படி பேசியதற்கு வெட்கப்பட வேண்டும்."

"இனி இந்த நாட்டில் தங்குவதற்கான உரிமையை அவர் இழந்துவிட்டார். கிரிக்கெட் என்பது எங்களுடைய மதம். நாம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இழந்தோம். அப்போது பலரும் பல விஷயத்தை பேசினார்கள். ஆனால் நாங்கள் ரோகித் சர்மா ,விராட் கோலி ஆகியோருக்கு துணை நின்றோம். தற்போது இந்த பேச்சு எனக்கு வருத்தத்தை கொடுத்திருக்கின்றது."

"இந்த விஷயம் எல்லாம் பாகிஸ்தானில் தான் நடக்கும். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே அவர்களுடைய வீரர்கள் அதிக அளவு வாழைப்பழம் சாப்பிடுவதாக குற்றம் சாத்தியுள்ளார். சமா முஹம்மது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கொஞ்சம் கூட நாம் பொறுத்துக் கொள்ளக்கூடாது. நான் மட்டும் இந்த நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் சமா முகம்மதை பார்த்து உன்னுடைய பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு செல் என்று கூறுவேன்" என்று யுவராஜ் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

Story first published: Tuesday, March 4, 2025, 8:01 [IST]
Other articles published on Mar 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+