IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி, ரோகித் ஆகிய இந்திய அணி டாப் வரிசை வீரர்கள் அடித்த ரன்கள்
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதியில் உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் கடந்த 2024 டி20 உலக கோப்பை அரையிறுதியில் மோதியது. இதில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை ஆடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.
ஆனால் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் என்பதால் போட்டி களமே வித்தியாசமாக இருக்கும். இரு அணிகளும் கடந்த 2023 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பல பரிட்சை நடத்தியது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கு பதிலடி தீர்க்கும் விதமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் செயல்பட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி ரோகித் சர்மாவும் பல சம்பவங்களை செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த இரண்டு வீரர்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
கேப்டன் ரோகித் சர்மாவை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 45 இன்னிங்ஸ்கலை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். இதில் மொத்தமாக அவர் 2379 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 58 ஆகும். ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் ஆகும்.
ரோகித் சர்மா 9 முறை அரைசதமும் எட்டு முறை சதமும் அடித்துள்ளார். அதேபோன்று விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 47 ஒருநாள் இன்னிங்சில் விளையாடி இருக்கிறார். இதில் விராட் கோலி 2367 ரன்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியின் சராசரி 53 என்ற அளவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அதிகபட்சமாக 123 ரன்கள் அடித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 அரைசதம் அடித்துள்ள விராட் கோலி 8 சதம் அடித்துள்ளார். கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழு இன்னிங்ஸ் விளையாடி 272 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும். இதேபோன்று ஸ்ரேயாஸ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 11 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 274 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். கே.எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 இன்னிங்ஸ் விளையாடி 691 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 7 அரை சதம் அடங்கும் சராசரி 57 என்ற அளவில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications