Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம் கோன்ஸ்டாஸ் பக்கம் வீசிய அதிர்ஷ்டக் காற்று.. அன்றே 6 முறை தப்பிவிட்டார்.. பும்ரா பேட்டி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 6-7 முறை அதிர்ஷ்டத்தால் தப்பிவிட்டதாக இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார். முதல் 2 ஓவர்களிலேயே சாம் கோன்ஸ்டாக் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு வந்த போதும், அது மிஸ்ஸாகிவிட்டதாக கூறியிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல், ஜஸ்பிரிட் பும்ரா ஒருவர் தான். பும்ரா ஒருவரை மட்டும் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திண்டாடி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ind vs aus jasprit bumrah sam konstas

இந்த நிலையில் பும்ராவை நினைத்து அஞ்சி வந்த ஆஸ்திரேலியா வீரர்களும், ரசிகர்களும் கடந்த 2 நாட்களாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸின் அதிரடியான ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது. பும்ராவின் பவுலிங்கில் 2 ஓவர்களில் மட்டும் 32 ரன்களை விளாசியதன் மூலமாக அவர் ரசிகர்களின் நம்பிக்கை பெற்றுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா பேசுகையில், சாம் கோன்ஸ்டாஸ் ஒரு சுவாரஸ்யமான பேட்ஸ்மேனாக தெரிகிறார். எந்த சூழ்நிலையிலும் நான் ஆட்டத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன். ஒருநாளும் ஆட்டத்தில் இருந்து தள்ளி இருப்பதாக நினைக்கவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.

ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை. கிரிக்கெட் விளையாட்டே அப்படிதான். சில நேரங்களில் சாதகமாகவும், சில நேரங்களில் பாதகமாகவும் அமையும். அதனால் சிறந்த வீரர்களை கூட விமர்சிக்க வேண்டிய சூழல் நிகழும். எந்த நேரத்தில் சவாலுக்காக தான் காத்திருக்கிறேன். ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியவில்லை.

விக்கெட்டுகள் கிடைப்பது சில நேரங்களில் நம் கைகளில் இருக்காது. டி20 கிரிக்கெட்டை அதிகளவில் விளையாடி இருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டை தான் விளையாடி வருகிறேன். அதனால் நாம் மிகச்சிறப்பாக பவுலிங் செய்யும் போது கூட நமக்கு விக்கெட் கிடைக்காது. ஆனால் சில சமயம், துல்லியத்தில் சிக்கல் உண்டாகும் போது கூட விக்கெட் கிடைக்கும். என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, December 28, 2024, 16:35 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+