Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பும்ரா மீது இனவெறி பேச்சு! பெண் வர்ணனையாளர் Isa guha-க்கு எதிர்ப்பு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் பும்ராவின் பந்துவீச்சு மட்டும்தான் எடுபட்டது.

மற்ற வீரர்களின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் அசால்டாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் பும்ரா மட்டும் அபாரமாக பந்து வீசி 72 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ind vs aus jasprit bumrah isa guha india vs australia vs

எனினும் தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த சூழலில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் பந்துவீச்சை தனது தோள் மீது சுமந்து செல்லும் பும்ராவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில் பும்ரா ஐந்து விக்கெட் எடுத்த போது முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையும் பெண் வர்ணனையாளருமான ஈஷா குகாவை பாராட்டி பேசுகிறேன் என்ற பெயரில் இனவெறி சொல் ஒன்றை பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரட்லீ முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்த பும்ரா இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார் என்று பாராட்டினார். அப்போது பேசிய இஷா குகா, பும்ராவை MVP என்று கூறினார். MVP என்றால் Most valuable player என்று அர்த்தம். ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என பேசிய இசா குஹா, most valuable Primate என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரைமட் என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த ஒரு உயிரினத்தை குறிக்கும். இதனால் இஷா குகா பும்ராவை இன வெறியுடன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பலரும் இஷா குஹாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் இஷா குஹா கிரிக்கெட் வர்ணனை செய்ய தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, December 15, 2024, 20:08 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+