Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான்கில் நான்கும் போச்சு! பேட்டிங்கும் சரியில்ல! ஓய்வு முடிவை அறிவியுங்கள் ரோகித்.. போதும் சார்!

அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு சரிந்து இருக்கிறது.

இந்த சூழலில் ரோகித் சர்மா கேப்டன் ஆக செயல்பட்டு தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

ind vs aus rohit sharma india vs australia vs


இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மோசமான தோல்வியை தழுவினார். இதன் மூலம் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு இந்தியா தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ரோகித் சர்மா பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக களம் இறங்கும் ரோஹித் சர்மா அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடு வரிசையில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா நடு வரிசையில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் முதல் இன்னிங்சில் 6 ரன்களும், 2வது இன்னிங்சில் 3 ரன்களும் அடித்து அவுட்டாகி இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா கடந்த எட்டு இன்னிங்சில் மொத்தமாகவே 100 தான் சேர்த்திருக்கிறார். இதில் கடைசியாக அவர் அரைசதம் அடித்து ஏழு இன்னிங்ஸ் ஆகிவிட்டது. இதனால் ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக தடுமாறி வருவதால் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பேட்டிங் சரியாக விளையாடததால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியும் ஆட்டம் காணுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு பும்முராவுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இதே போன்ற தோல்வியை இந்தியா தொடர்ந்து பெற்றால் ரோகித் சர்மா தாமாகவே ஒய்வுபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Sunday, December 8, 2024, 11:34 [IST]
Other articles published on Dec 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+