Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: பும்ரா ஓவரில் 2 சிக்ஸ் அடிச்சிட்டா பெரிய ஆளா.. ஆஸ்திரேலிய வீரரை பொளந்த இந்திய ரசிகர்கள்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் முதல் இன்னிங்ஸில் பும்ராவின் பந்து வீச்சில் இரண்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் பந்து வீச்சில் சிக்ஸ் அடிப்பது மிகவும் கடினமாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த பேட்ஸ்மேனும் பும்ராவின் பந்து வீச்சில் சிக்ஸ் அடிக்கவில்லை. இந்த நிலையில், 19 வயது வீரர் தனது அறிமுக போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ராவுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை அடித்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

ind vs aus jasprit bumrah india vs australia test match vs

ஆஸ்திரேலிய ரசிகர்கள் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ கொண்டாடத் துவங்கினர். தான் மிகப்பெரிய சாதனை செய்ததைப் போல சாம் கோன்ஸ்டாஸ் அதன் பின் ரசிகர்களை தனக்காக உற்சாக குரல் எழுப்புமாறு கூறினார்.

மேலும், 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த பின் மாபெரும் உலக சாதனை செய்த வீரரை போல ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவதும், பவுண்டரி எல்லையில் நின்று ரசிகர்களை உற்சாகம் செய்யுமாறு கூறிக் கொண்டே இருந்ததும் என அவரது செயல்கள் சற்று அதிகப்படியாகவே இருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கோன்ஸ்டாஸ் 8 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் பவுல்ட் அவுட் செய்தார் பும்ரா. இதை அடுத்து பும்ரா ரசிகர்களை உற்சாகக் குரல் எழுப்புவது போல செய்து காட்டி அவரை கிண்டல் செய்தார்.

இதை அடுத்து இந்திய ரசிகர்கள் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர். "இரண்டு சிக்ஸ் அடித்து விட்டால் பெரிய ஹீரோ போல நடந்து கொள்வதா? சாதனையாளர்கள் கூட அமைதியாக இருக்கும்போது பும்ராவுக்கு எதிராக இரண்டு சிக்ஸ் அடித்து விட்டு தலைகால் புரியாமல் ஆடியதற்கு அவர் பதில் கொடுத்திருக்கிறார்." என கூறி வருகின்றனர்.

மேலும், சாம் கோன்ஸ்டாஸ் முதல் இன்னிங்ஸில் எடுத்த 60 ரன்களில் பல ரன்கள் தவறான ஷாட்கள் மூலம் கிடைத்தது என்பதையும் சுட்டிக்காட்டி அவரையும் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Sunday, December 29, 2024, 9:44 [IST]
Other articles published on Dec 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+