For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus First Test : அதே இன்னிங்க்ஸ்.. அதே ரன்கள்.. புஜாரா தான் அடுத்த டிராவிட்!!

Recommended Video

ஆஸ்திரேலியா பந்து வீச்சில் திணறிய இந்தியா, காப்பாற்றிய புஜாரா- வீடியோ

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா ஆஸ்திரேலியாவில் தன் முதல் சதத்தை அடித்தார்.

முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியில் புஜாரா தவிர எந்த வீரரும் சரியாக ரன் குவிக்கவில்லை.

புஜாரா சதம் அடித்து சில மைல்கற்களை கடந்தார். அதில் முக்கியமாக கங்குலி மற்றும் டிராவிட்டின் சில மைல்கற்களை எட்டினார் புஜாரா.

புஜாராவின் 16வது சதம்

புஜாராவின் 16வது சதம்

புஜாரா 231 பந்துகளில் சதம் கடந்தார். இது புஜாராவின் 16வது சதம். ஆஸ்திரேலியாவில் முதல் சதம். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்றாவது சதம் ஆகும். முதலில் பொறுமையாக ஆடிய புஜாரா பின்னர் விக்கெட்கள் விழுந்து வந்ததால் வேகமெடுத்தார்.

கங்குலி சாதனை சமன்

கங்குலி சாதனை சமன்

கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் அடித்துள்ளார். அந்த சாதனையை சமன் செய்தார் புஜாரா. புஜாரா தன் 65வது டெஸ்ட் போட்டியிலேயே 16வது சதத்தை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி 133 டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் அடித்துள்ளார்.

டெஸ்டில் 5000 ரன்கள்

டெஸ்டில் 5000 ரன்கள்

சதம் அடித்து ஆடிய புஜாரா டெஸ்டில் 5000 ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை தன் 108வது இன்னிங்க்ஸ்-ல் எட்டியுள்ளார். டிராவிட்டும் தன் 108வது இன்னிங்க்ஸ்-ல் தான் 5000 ரன்களை எட்டினார் என்பது ஆச்சரியமான விஷயமாகும். ஏற்கனவே, புஜாரா இந்திய அணியின் அடுத்த டிராவிட் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இருவரும் ஒரே மாதிரி 5000 ரன்கள் மைல்கல்லை எட்டி இருக்கிறார்கள்.

புஜாரா 123 ரன்கள் எடுத்தார்

புஜாரா 123 ரன்கள் எடுத்தார்

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 250 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. ஷமி மற்றும் பும்ரா மட்டுமே மீதமிருக்கும் வீரர்கள். புஜாரா 123 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

Story first published: Thursday, December 6, 2018, 16:28 [IST]
Other articles published on Dec 6, 2018
English summary
Ind vs Aus First Test : Pujara hit 16th test century and crosses 5000 runs in Adelaide
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X