Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus First Test : டெஸ்ட்ல வாய்ப்பு கொடுத்தா இப்படியா பண்ணுவீங்க ரோஹித்? ரசிகர்கள் கோபம்

Recommended Video

ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கோபம்- வீடியோ

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் ஆடினர்.

புஜாரா மட்டுமே நிலைத்து நின்று சதம் அடித்தார். ரோஹித் இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தார். இந்திய அணியை இந்த போட்டியில் காப்பாற்றி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்த போது அடித்த ஷாட் டி20 பேட்ஸ்மேன் அடித்ததை போன்றே இருந்தது. ரசிகர்கள் இப்படி பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்த ரோஹித் மேல் கோபத்தில் உள்ளனர்.

இந்தியா தடுமாற்ற பேட்டிங்

இந்தியா தடுமாற்ற பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர்கள் முரளி விஜய் 11, ராகுல் 2, அடுத்து கோலி 3, ரஹானே 13 என வெளியேறி இந்தியா 41 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.

ரோஹித் - புஜாரா இணை

ரோஹித் - புஜாரா இணை

அப்போது புஜாரா - ரோஹித் இணைந்தனர். இருவரும் ஓரளவு ஓவர்களை கடத்தி வந்தனர். புஜாரா மொத்தமாக கட்டை போடா ஆரம்பித்தார். ரோஹித் பொறுமையாக ஆரம்பித்து பின்னர் ரன் குவிக்கத் துவங்கினார்.

ரோஹித் சிக்ஸர் மற்றும் அவுட்

ரோஹித் சிக்ஸர் மற்றும் அவுட்

திடீரென ரோஹித் சிக்ஸர் அடித்தார். இவர் பொறுமையாக ஆடலாமே என நினைத்துக் கொண்டு இருந்த போது நாதன் லியோன் பந்தில் தூக்கி அடித்தார். இந்த பந்து பவுண்டரி கோட்டுக்கு சற்று தள்ளி சென்றது. அங்கே நின்று இருந்த பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் கால் வைத்து பந்தை தடுத்தார். அதனால், சிக்ஸ் என அறிவிக்கப்பட்டது. இது கேட்ச் ஆகவும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் அடுத்த பந்தில் அதே போன்ற ஒரு ஷாட் அடித்தார் ரோஹித். இந்த முறை பந்து பவுண்டரி எல்லைக்கு சில ஆடி தூரம் முன்பே வர, எளிதாக கேட்ச் பிடிக்கப்பட்டது.

ஹனுமா விஹாரியின் இடம்

ரோஹித் இந்த போட்டியில் இடம் பெறும் முன்பு ஹனுமா விஹாரிக்கும் அவருக்கும் போட்டி இருந்தது. ஹனுமா தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். அப்படி இருந்தும் மூத்த வீரர், அனுபவ வீரர் என்ற அடிப்படையில் நீண்ட காலம் கழித்து ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

அப்படி கிடைத்த வாய்ப்பை ரோஹித் இப்படி சொதப்பி விட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். ட்விட்டரில் ரோஹித் சர்மாவை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். அதில் சில சாம்பிள் இங்கே..

அவுட் ஆன விதம் தான்..

அவர் அவுட் ஆனது பிரச்சனை இல்லை. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஆடி அவுட் ஆகி விட்டாரே என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் இந்த ரசிகர்.

ரோஹித்தை டீம்ல இருந்து தூக்குங்க

ரோஹித் அடித்த ஷாட் அதிர்ச்சியாக இருந்தது. அதற்காகவே அவரை அணியில் இருந்து தூக்க வேண்டும் என்கிறார் இந்த ரசிகர்.

டெஸ்ட் வாய்ப்பு

டெஸ்ட் வாய்ப்பு

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "தன் கிரிக்கெட் வாழ்வின் இந்த காலகட்டத்தில் ரோஹித் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் முக்கியமான ஒன்றாக கருத வேண்டும். இது போல வாய்ப்புக்களை வீணாக்கக் கூடாது."என கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 6, 2018, 14:33 [IST]
Other articles published on Dec 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+