Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவாஸ்கர் கருத்தை குப்பையில் போடனும்! இது என்ன இந்தியா என நினைத்தீர்களா? ஆஸி. வீரர் கடும் சாடல்

ஆஸ்திரேலிய அணியில் அரசியல் காரணமாக தான் ஹேசல்வுட் நீக்கப்பட்டு இருப்பதாக கவாஸ்கர் கூறிய கருத்துக்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை தழுவியது.

இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேசல்வுட், பேட்ஸ்மேன்களை குறை கூறியிருந்தார். சில நாட்களில் ஹேசல்வுட் காயம் ஏற்பட்டதாக கூறி அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கவாஸ்கர் ஆஸ்திரேலியா அணியின் பிளவு ஏற்பட்டதாலேயே ஹேசல்வுட் நீக்கப்பட்டு இருந்ததாக கூறியிருந்தார்.

ind vs aus india vs australia test match rohit sharma

இந்த நிலையில் கவாஸ்கரின் இந்த கருத்தை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரியான் ஹாரிஸ் கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலியா அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறுவதை நான் வெறும் குப்பையான கருத்து என்று தான் கூறுவேன்.

அது அனைத்தும் குப்பையில் போட வேண்டியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறாது. இந்திய கிரிக்கெட்டில் வேண்டுமானாலும் அது நடக்கலாம். ஏனென்றால் நான் அங்கு அனைத்தையும் பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலிய அணியில் அரசியலுக்கு இடம் கிடையாது. ஹேசல்வுட் பேசியதற்காக எல்லாம் யாரும் அவரை அணியிலிருந்து நீக்கி இருக்க மாட்டார்கள்.

நான் ஆஸ்திரேலியா அணி வீரர்களிடமும் பேசினேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள். ஊடகங்கள் எவ்வாறு செயல்படும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதில் ஆஸ்திரேலிய ஊடகங்களும் குத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. காரணம் பெர்த் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை.

எனினும் கிரிக்கெட்டில் எப்போதுமே நம்மை விட எதிரணி சிறப்பாக செயல்பட்டு நம்மை வீழ்த்துவதும் உண்டு. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் சொந்த மண்ணில் தொடரை இழந்து இருக்கிறது. அதற்கு காரணம் அப்போது இந்தியாவிடம் நல்ல அணியிருந்தது. தற்போது நாம் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை தான் தோற்று இருக்கிறோம்.அதற்குள் விமர்சனம் செய்ய தேவையில்லை. நான் கவாஸ்கர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அவர் இந்த கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவர்.

ஆனால் கவாஸ்கர் தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். அதனை ஆஸ்திரேலிய ஊடகங்கள் சரியாக பயன்படுத்தி ஒரு விருந்து போல் கொண்டாடுகிறார்கள் என்று ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இதேபோன்று முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், கவாஸ்கரின் கருத்து வேடிக்கையாக இருக்கிறது. கவாஸ்கர் ஆஸ்திரேலியா அணியின் மீது வைத்திருக்கும் புகார்கள் அபாண்டமானவை. ஹேசல் வுட் தற்போது இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் மரியாதைக்குரிய வீரராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 5, 2024, 9:30 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+