Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் டூ புஜாரா.. BGT டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய 5 பேட்ஸ்மேன்கள்.. கோலிக்கு எந்த இடம்?

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில், பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவ.22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 1996ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர் மற்றும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இருவரையும் கவுரவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது.

ind vs aus virat kohli sachin tendulkar

அது தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் ரைவல்ரியாக மாறியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இரு நாடுகளின் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை பொறுத்தே வெற்றி தோல்விகள் அமையும். அந்த வகையில் பார்டர் கவாஸ்டர் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் என்பதை பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான். இதுவரை பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 11 சதங்கள், 16 அரைசதங்கள் உட்பட 3,630 ரன்களை விளாசி இருக்கிறார். பிஜிடி வரலாற்றில் 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் சச்சின் தான். ஆனால் ஒருமுறை கூட ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

இவருக்கு பின் 2வது இடத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,555 ரன்களை விளாசி இருக்கிறார். இவரது கால கட்டத்தில் இந்திய மண்ணில் நடந்த 11 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 3வது இடத்தில் இந்திய ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரைவல்ரி உருவாகியதற்கு முக்கியக் காரணமாகவே இருந்தவர் லக்‌ஷ்மண் தான். கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 281 ரன்களை விளாசி வரலாற்று இன்னிங்ஸை ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் 6 சதங்கள் உட்பட 2,434 ரன்களை விளாசி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கூடுதல் சிறப்பாக விளையாடுவார்.

தொடர்ந்து 4வது இடத்தில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் உள்ளார். அவர் பிஜிடி தொடரில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 13 அரைசதங்கள் உட்பட 2,143 ரன்களை விளாசினார். பின்னர் 5வது இடத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் இந்திய அணியின் புஜாரா இடம்பிடித்துள்ளார். இதுவரை பிஜிடி தொடரில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 2,074 ரன்களை விளாசி இருக்கிறார்.

இந்த பட்டியலில் விராட் கோலி 7வது இடத்தில் இருக்கிறார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 1,979 ரன்களை விளாசியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 600 ரன்களுக்கு மேல் குவிக்கும் பட்சத்தில், அவரால் நம்பர் 2 இடத்திற்கு செல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, November 15, 2024, 16:26 [IST]
Other articles published on Nov 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+