Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விரைவில் நீக்கப்படுவார்.. முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் விரைவில் நீக்கப்படுவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் தூல் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்தது.

50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டம் என பல்வேறு சாதனைகளை படைத்தது.

bgt 2024 ind vs aus virat kohli rohit sharma

ஆனால் ராகுல் டிராவிட் வெளியேறிய பின்பு இந்திய அணி தோற்காத இடங்களில் எல்லாம் தோல்வியை தழுவி தற்போது அடி பாதாளத்தில் இருக்கின்றது. இதன் காரணமாக பயிற்சியாளர் கம்பீர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் சேப்பல் ஒன்றரை ஆண்டுதான் பதவியில் நீடித்தார்.

தற்போது கம்பீர் அதனை விட மிக குறைந்த காலமே பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பார் என்று நினைக்கின்றேன். நாம் கம்பீருக்கு எதிராக விளையாடி இருப்போம். இல்லையெனில் அவருடன் இணைந்து கிரிக்கெட் வர்ணனை செய்திருப்போம். கம்பீர் எப்படிப்பட்ட கேரக்டர் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் கம்பீர் போல ஒரு நபர் இந்திய அணிக்கு தற்சமயம் தேவையா என்பதை பிசிசிஐ யோசிக்க வேண்டும்.

வீரர்களுடன் இணைந்து அவர்களை எவ்வாறு சிறப்பாக விளையாட வைக்க வேண்டும் என்பது கம்பிருக்கு நன்றாக தெரியும். ஆனால் இது போன்ற மிகப்பெரிய தொடரில் கம்பீரிடமிருந்து அதை எதிர்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று. கம்பீர் எப்போதுமே ஊடகங்களுடன் நட்புணர்வுடன் இருக்க மாட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த முடிவை பெறாமல் நான்குக்கு ஒன்று இல்லை ஐந்துக்கு பூஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் நிச்சயமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

சைமன் தூலின் கருத்தை ஒப்புக்கொண்ட நாசர் உசேன், கம்பீர் வெளியே தான் கோபப்படுகிறார். ஆனால் வீரர்களிடம் அமைதியாக தான் நடந்து கொள்கிறார். ரிக்கி பாண்டிங் தொடர்பான கேள்விக்கு கம்பீர் அளித்த பதில் நிச்சயம் தவறு. ஒரு கிரிக்கெட் விமர்சகர் அவ்வாறு தங்களது அணியை மட்டுமே கவனித்து கருத்து சொல்ல முடியாது என்று நாசர் உசேன் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 20, 2024, 17:55 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+