Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான்காவது ஸ்டெம்ப் எங்கிருந்து வந்தது? அப்படியே அதிர வைத்த ரிப்ளே.. என்ன மாதிரியான மோசடி இது!?

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய
வீரர் ஸ்மித்திற்கு செய்யப்பட்ட ரிவ்யூ ஒன்று பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338
ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி
வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த நிலையில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்து டிக்ளேர்
செய்தது. இதையடுத்து இந்தியா தற்போது 1 விக்கெட்டை இழந்து 78 ரன்கள்
எடுத்து ஆடி வருகிறது.

இந்தியா

இந்தியா

இந்தியாவிற்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்

ஸ்மித்திற்கு செய்யப்பட்ட ரிவ்யூ ஒன்று பெரிய அளவில் விமர்சனங்களை

சந்தித்துள்ளது. இந்திய வீரர் அஸ்வின் பவுலிங்கில் ஸ்மித் எல்பிடபிள்யூ

ஆவது போல தெரிந்தது. ஆனால் இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

ரிவ்யூ

ரிவ்யூ

இதையடுத்து இந்திய அணி உடனே ரிவ்யூ கேட்டது. இந்த ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை

தொடாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிவ்யூவில் அவுட் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஸ்டம்பிற்கு மிகவும் அருகில் பந்து சென்றது.

ஸ்மித்

ஸ்மித்

இதனால் அம்பயர் கால் என்று கூறப்பட்டது. அதோடு அம்பயர் கால் என்பதால்

இந்திய அணியின் ரிவ்யூவும் ரிட்டெயின் செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக

காட்டப்பட்ட ரிப்ளேவில்தான் பெரிய முறைகேடு தெரிய வந்தது. இந்த ரிப்ளேவில்

நான்கு ஸ்டம்ப் காட்டப்பட்டது தெரிய வந்தது.

 விமர்சனம்

விமர்சனம்

ஆம், ஸ்மித்திற்கு போடப்பட்ட அந்த பந்து நான்காவது ஸ்டம்பை ஒன்றை கடந்து

செல்வது போல ரிவ்யூவில் காட்டப்பட்டது. ரிவ்யூவில் இப்படி நான்கு ஸ்டம்ப்

காட்டப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதன் மூலம் இந்த பந்து மூன்றாவது

ஸ்டம்பிற்கு அருகில் செல்லவில்லை என்பது உறுதியானது.

தவறு

தவறு

ஆகவே இதற்கு அம்பயர்ஸ் கால் கொடுத்திருக்க முடியாது. நியாயப்படி இந்திய அணி

இந்த ரிவ்யூவை இழந்து இருக்க வேண்டும். ஆனால் விசித்திரமாக காட்டப்பட்ட

நான்காவது ஸ்டம்ப் காரணமாக அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டது. என்ன மாதிரியான

மோசடி இது , எப்படி ரிப்ளேவில் நான்கு ஸ்டம்ப்களை காட்ட முடியும் என்று

பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Sunday, January 10, 2021, 21:50 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+