கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியை குறைத்து எடைப் போட்ட ஆஸ்திரேலிய அணிக்கு தக்க பதிலடி கொடுத்து சாதனை புரிந்து டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் தனி முத்திரை பதிவு செய்த ஆட்டம் இது.இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம் கண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் சதம் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய ஒப்பனிங் வீரர் 3 ரன்களில் சதத்தை தவற விட்டார்.ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 445.
இந்திய அணி கஷ்டப்பட்டு எடுத்த ஸ்கோர் 171.ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட கூறினார்கள்.
ஆம் . இந்திய அணிக்கு தொடர பாலோவ் ஆன் அளிக்கப்பட்டது. ( follow - on )
மகிழ்ச்சியில் இருந்தனர் .ஆஸ்திரேலிய வீரர்கள், இந்த டெஸ்டிலும் அவர்கள் கை ஓங்கி இருப்பதை நினைத்து.இந்திய அணியில் ஒரு வீரர் மட்டும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தார்.

அவர் இரண்டாவது இன்னிங்சிலும் அதிக தனி நபர் ஸ்கோர் எடுத்து மே ட் சி ன் போக்கையே மாற்ற வல்லவர் என்றும் அந்த முதல் இன்னிங்ஸ் முடிவில் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை நிரூபித்த டெஸ் ட் இது.
இவர் பேட்டிங்கில் வெளுத்து வாங்கினார் என்றால் ஸ்பின் பவுலர் ஒருவர் இரண்டு இனிங்க்சிலும் பவுலிங்கில் அசத்தி விட்டார். தனிப்பட்ட முறையில் சாதித்த முதல் இந்திய வீரர் என்ற பெயரை தட்டி சென்றார் இந்த குறிப்பிட்ட டெஸ்டில்.
மார்ச் 2001. ஈடன் கார்டன்ஸ் மைதானம்.கல்கத்தா.
முதலில் பேட்டிங் விளையாடிய
ஆஸ்திரேலிய அணி எடுத்தது 445 ரன்கள். உதவியவர்கள் மாத்யூ ஹைட்டேன் 97,
கேப்டன் ஸ்டீவ் வாக் 110. ஆஃப ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் எடுத்தது
7 விக்கெட்டுக்கள்.
இந்திய அணி பேட்டிங்கில் மிக சுமாரான ஆட்டத்தை வெளிப் படுத்தியது.
வேக பந்து வீச்சாளர் க்ளேன் மெக்ராத் மிக அருமையாக பந்து வீசினார். இந்திய வீரர்களால் அவரது நேர்த்தியான பந்து வீச்சை எதிர் கொள்ள முடிய வில்லை.
அவரது பவுலிங் விவரம்
14 / 08 / 18 / 04
மற்ற வீரர்களும் சிறப்பாக பந்துக்கள் செலுத்தினர்.வி வி எஸ் லட்சுமணன் மட்டும் நின்று ஆடி 12 பவுண்டரிகள் உதவியுடன் அதிக பட்ச ரன்கள் 59 எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி விரைவாக டெஸ்டை முடித்து வெற்றி பெரும் எண்ணத்தோடு இந்திய அணிக்கு பாலோவ் ஆன் அளித்து ஆட்டத்தை தொடர்ந்தது.
தோல்வியை தவிர்க்க டிரா செய்வதே ஒரே வழி என்ற எண்ணத்தில் களம் கண்டனர் இந்திய வீரர்கள் .முதல் விக்கெட் 52, ரன்கள், 4 வது விக்கெட் 232 ரன்கள் இருக்கும் பொழுதும் விழுந்தன.அடுத்த விக்கெட் கண்ணுக்கு எட்டிய தூரம் விழுவதாகவே தெரியவில்லை. பவுண்டரிகள் பறந்த வண்ணம் இருந்தன.
அதிரடி ஆட்டம் அரங்கேறியது. ஒரு நாள், டி 20 மேட்ச் காண்பது போல எண்ணத்தை உண்டு செய்தது.
வி வி எஸ் லட்சுமணன், ராகுல் ட்ராவிட் ஜோடி இணை பிரியாமல் வெளுத்து வாங்கினார்கள். மூன்றாம் நாள் முடிவில் வி வி எஸ் லட்சுமணன் 109*, ராகுல் ட்ராவிட் 7*அணி ஸ்கோர் 254 / 4
நான்காம் நாள் முடிவில் வி வி எஸ் லட்சுமணன் 275 *,
ராகுல் ட்ராவிட் 155 *
அணி ஸ்கோர் 589 / 4
இந்திய அணி இரண்டாாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது. ஸ்கோர் 675 / 7 டிக்ளர்.
கடைசி நாள் முடிவிற்குள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இலக்கு 384 ரன்கள்.டெஸ்ட்டின் போக்கே தலை கீழாக மாறியது.ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் தாக்குப் பிடித்து ஆடினர். ஆனால் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருத்தன.ஹர்பஜன்சிங் இரண்டாவது இன்னிங்சிலும் அருமையான பந்து வீச்சை தொடர்ந்தார்.
அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து மூன்று வீரர்கள்
விக்கெட்டுக்களை வீழ்த்தி, முதல் இந்திய வீரர் டெஸ்டில் ஹாட்ரிக் சாதனை புரிந்தவர் என்ற பெருமை பெற்றார்.முதல் இன்னிங்ஸ் முடிவில் வெற்றி நமதே என்ற மிதப்பில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஐந்தாம் நாள் எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்று போராடினார்கள்.
போராடிய இந்திய அணி மகத்தான வெற்றி சாதனை புரிந்தனர்.
ஆஸ்திரேலிய அணி
ஆல் அவுட் 212.
ஹார்பஜன் சிங் எடுத்தது 6 விக்கெட்டுக்கள்
வி வி எஸ் லட்சுமணன்
59, 281
ராகுல் ட்ராவிட் 25, 180
பவுண்டரிகள்
வி வி எஸ் லட்சுமணன்
12, 44 = 56
ராகுல் ட்ராவிட்
4, 20 = 24
இந்தியாவின் இரண்டவாது இன்னிங்ஸ் பேட்டிங்கின் பொழுது
ஆஸ்திரேலிய தரப்பில் பவுலிங் செய்த வீரர்களின் எண்ணிக்கை 9.
புரட்டிப் போட்டு எதிர் பாரத ரிசல்ட்டை அளித்து சரித்திரத்தில் இடம் பெற்றது இந்த மாகத்தான டெஸ்ட்
மிக சிறப்பாக பந்து வீசய ஹர்பஜன் சிங் தொடர் நாயகராக அறிவிக்கப் பட்டார்.
இந்த குறிப்பிட்ட டெஸ்டில் தனிப்பட்ட பேட்டிங் செய்து டெஸ்டிற்கு உயிரோட்டம் அளித்த வி வி எஸ் லட்சுமணன் ஆட்ட நாயகராக ஆனார்.
வாசுதேவன், பெங்களூரு