Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராட்மேனையே 13 ரன்களில் சுருட்டிய இந்திய வீரர்! சிட்னி டெஸ்டில் கெத்து காட்டிய இந்திய அணி

மெல்போர்ன் : டெஸ்ட் கிரிக்கெட். சரித்திரத்தில் மிகவும் புகழ் பெற்ற டான்
ப்ராட்மன் இந்த டெஸ்டில் எடுத்த ரன்கள் 13. எதிரணியினர் முதல் முறையாக
ஆஸ்திரேலியாவிற்குசுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் குழுவினர்.

இந்த நிகழ்வு இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடைப் பெற்றது.
டிசம்பர், 1947 ல் கேப்டன் ப்ராட்மன் விக்கெட்டை போல்ட் அவுட் செய்தவர் விஜய் ஹாசரே. 38 பந்துக்கள் எதிர் கொண்டு ஆடிய ப்ராட்மன் அடித்தது ஒரே ஒரு பவுண்டரி மட்டும் தான்.முதலில் பேட்டிங் ஆடிய அவ்வளவு அனுபவம் இல்லாத இந்திய அணி எடுத்த ரன்கள் 188.

ind vs aus virat kohli rohit sharma melbourne weather forecast vs

ஆல் ரவுண்டர் டாட்டு பாட்கர் 51 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரிகள் அடித்த இவர் எதிர் கொண்ட பந்துக்கள் எண்ணிக்கை 97. கிஷேன் சந்த் 181 பந்துக்கள் நின்று ஆடி 4 பவுண்டரிகள் உதவியுடன் 44 ரன்கள் குவித்தார்.கேப்டன் லாலா அமர்நாத் 25, குல் முஹம்மது 29 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பவுலர் காலின் மக்கூல் 3 மற்றும் பில் ஜான்ஸ்டன், கீத் மில்லர், இயன் ஜான்சன் மூவரும் தலா 2 விக்கெடுக்கள் வீழ்த்தினர்.ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நமது பவுலர்களின் திறமையை குறைத்து எடைப் போட்டு விட்டனர்.
மிக்க நம்பிக்கையோடு அவர்கள் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடத் துவங்கினர்.

ஆனால் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.எதிர் பார்த்தபடி ரன்கள் அதிகரிக்கவில்லை.அணியின் ஸ்கோர் 100 ரன்களை தொடும் முன்பு ஆஸ்திரேலிய அணியன் முக்கிய பேட்ஸ்மன்கள் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிவிட்டனர்.
97 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து போராடிக் கொண்டு இருந்தது.

107 ரன்களுக்கு அவர்கள் அணி ஆ ல் அவுட்.பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய டாட்டு பாட்கர் பவுலிங்கில் துவக்கி 10 ஓவர்கள் வீசி 14 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுக்கள் எடுத்தார். இரண்டு மெய்டன் ஓவர்கள் அடங்கும்.டான் ப்ராட்மன் விக்கெட்டை வீழ்த்திய விஜய் ஹாசரே மிக மிக சிறப்பாக பந்துக்கள் வீசி மொத்தம் 4 வீரர்கள் அவுட் ஆக காரணமாக திகழ்ந்தார்.

81 ரன்கள் முன்னிலைப் பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் துவக்கிய இந்திய அணியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
கேப்டன் லாலா அமர்நாத் அதிக பட்ச ரன்கள் எடுத்தார். 14.

அமீர் இலாஹி 13, விஜய் ஹாசரே 13* நாட் அவுட்.விக்கெடுக்கள் இடை இடையே விழுந்த வண்ணம் இருந்த போதிலும் விஜய் ஹாசரே நின்று, பொறுமையாக
ஆஸ்திரேலிய பவுலர்களின் தாக்குதலை எதிர் கொண்டு 90 பந்துக்கள் ஆடினார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் மேம்பட்ட பவுலிங்கை எதிர் கொள்ள முடியாமல் விக்கெடுக்களை இழந்த வண்ணம் இருந்தது.டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் இந்திய அணியின் 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்
61 / 7.

ஆஸ்திரேலியாவின் விக்கெட் எடுத்த வீரர்கள்
ரே லிண்ட் வால் 1 - 13
பில் ஜான்ஸ்டன் 3 - 15
கீத் மில்லர் 1 - 5
இயன் ஜான்சன் 2 - 22

இந்த டெஸ்டில் தான் டாட்டு பாட்கர் அறிமுகம் ஆனார். அறிமுக டெஸ்டில் அவருடைய
ஆல் ரவுண்டு ஆட்ட திறமையை வெளிப் படுத்தினார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Saturday, December 28, 2024, 18:19 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+