Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர் அவமானம், கேலி.. கஷ்டப்படும் இந்திய வீரர்கள்.. கோலி இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி தொடர்ந்து ஆடி இருந்தால் இந்திய வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் கோலி அணியில் இருந்தார்.

ஆனால் கோலி சென்ற பின் வரிசையாக இந்திய அணி வீரர்களுக்கு எதிராக கடுமையான சர்ச்சைகள், விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

பீப்

பீப்

முதலில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.பயோ பபுளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்திய வீரர்கள் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதற்காக கடுமையான விமர்சனங்களை வைத்தது.

வேறு

வேறு

அதற்கு அடுத்து இந்திய வீரர்கள் விளையாடும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போன் நகரில் நடக்க உள்ளது. அங்கு அதிக கொரோனா கேஸ்கள் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகள் போடப்பட உள்ளது.இந்த கூடுதல் கட்டுப்பாட்டு விதிகளை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் சிட்னியிலேயே நடத்த வேண்டும் , பிரிஸ்போன் நகரில் நடத்த கூடாது என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டுள்ளது.

மோசம்

மோசம்

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள ஆஸி நிர்வாகம் இந்திய வீரர்களை விமர்சனம் செய்தது.ஆஸ்திரேலியாவின் விதிகளை மதித்து கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிற்கு வர வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விமர்சனம்

விமர்சனம்

இப்படி வரிசையாக இந்திய வீரர்களை விமர்சனம் செய்த நிலையில், தற்போது களத்தில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சீண்டி வருகிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கி வருகிறார்கள். மத ரீதியாகவும், இன ரீதியாகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்களை சீண்டி உள்ளனர்.

கோலி

கோலி

முக்கியமாக இந்திய வீரர்கள் சிராஜ், சைனி , பும்ரா மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி தாக்குதலை நடத்தி உள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் கோலி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்காது. கோலி இருக்கும்போது களத்திலேயே அதிரடி பதிலடி கொடுப்பார்.

திட்டுவார்

திட்டுவார்

இதற்கு முன்பே ஆஸ்திரேலிய ரசிகர்களை திட்டி அவர்களுக்கு தக்க பதிலடியை கோலி கொடுத்து இருக்கிறார். ஆனால் இப்போது ரோஹித், ரஹானே என்று யாரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது இல்லை. களத்தில் இந்திய வீரர்கள் மிகவும் மௌனமாக இருப்பது ஏன், கோலி இல்லையென்றால் ஆக்ரோஷம் இருக்காதா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, January 10, 2021, 15:58 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+