Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- கடைசி டெஸ்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? முக்கிய வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெறுகிறது. புத்தாண்டு டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் சமனில் முடியும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே தொடரை 10 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றி விடும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ind vs aus sydney test rohit sharma virat kohli vs

இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து மோசமாக போராடி வருவது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஆடுகளம் இந்திய ஆடுகளங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக அமைந்திருக்கும். இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதற்கு இந்திய அணி வீரர்கள் சரியாக பேட்டிங் செய்ய வேண்டும். ரோகித் சர்மா கேப்டன் ஆக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அவர் தப்பித்துக் கொள்வார். இல்லையென்றால் இந்த போட்டி முடிவடைந்த பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிடுவார். பிளேயிங் லெவனில் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விடுவார்.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வீரராக கேஎல் ராகுல் களமிறங்க கூடும். நான்காவது வீரராக விராட் கோலியும், ஐந்தாவது வீரராக சுப்மன் கில் அல்லது சர்பராஸ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இதேபோன்று ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற கூடும்.ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பி வருவதால் அவருக்கு பதில் துருவ் ஜூரல் இடம்பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், எட்டாவது வீரராக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெறக்கூடும். இந்த நிலையில் இந்த தொடர் முழுவதும் அதிக ஓவர்கள் வீசிய பும்ராவுக்கு ஓய்வு தர வேண்டும் என்று கோரிக்கை இருந்தாலும் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என தெரிகிறது.

பத்தாவது வீரராக ஆகாஷ் தீப்பும் 11 வது வீரராக பிரசித் கிருஷ்ணாவுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும் முன்னுரிமை சிராஜுக்கு தான் வழங்கப்படும். ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்க வேண்டும்.அப்படி நடந்தால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல முடியும்.

இந்தியா பிளேயிங் லெவன் : 1, ஜெய்ஸ்வால், 2, ரோகித் சர்மா, 3,கேஎல் ராகுல், 4, விராட் கோலி, 5, சுப்மன் கில்/ சர்பிராஸ் கான்,6 ரிஷப் பண்ட் / துருவ் ஜூரல், 7, ஜடேஜா, 8, வாசிங்டன் சுந்தர், 9, பும்ரா, 10, ஆகாஷ் தீப், 11,சிராஜ்/ பிரசித் கிருஷ்ணா

Story first published: Thursday, January 2, 2025, 6:54 [IST]
Other articles published on Jan 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+