Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஆஸ்திரேலிய மண்ணில் ODI கிரிக்கெட்டில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செயல்பாடு என்ன?

பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் களமிறங்குகிறார். துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் சாதாரண வீரராக தான் இந்த தொடரில் விளையாடுகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் டாப் பேட்டிங் வரிசையில் வீரர்களின் செயல்பாடு என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Ind vs Aus

இந்திய அணிக்காக 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் அடித்திருக்கும் கில் 8 சதம், 15 அரை சதம் அடித்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர் வெறும் ஒரே ஒரு நாள் போட்டியில் தான் விளையாடி இருக்கிறார். இதில் அதிகபட்சமாக 33 ரன்களை அவர் அடித்திருக்கின்றார். இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ், இதுவரை 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2845 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் 5 சதம், 22 அரை சதமும் அடங்கும். ஆனால் இவர் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 59 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 38 ரன்கள் ஆகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1327 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் ஐந்து சதம், 6 அரை சதம் அடங்கும். இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா ஆஸ்திரேலிய மண்ணில் 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1328 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு அரை சதம், 5 சதம் அடங்கும். இதேபோன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனும் நட்சத்திர வீரருமான கேஎல் ராகுல் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் வெறும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 93 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 76 ரன்கள் ஆகும்.

Story first published: Sunday, October 19, 2025, 6:00 [IST]
Other articles published on Oct 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+